HOLLYWOOD
ஹாலிவுட் நடிகரை கையில் குத்திய தனுஷ்.. வைரல் வீடியோ
ஹாலிவுட் நடிகர் ஒருவரை கையில் குத்தி களேபரம் செய்துள்ளார் தனுஷ். தற்போது அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
“தி கிரே மேன்” திரைப்படத்தில் தனுஷ் இடம்பெற்ற ஒரு காட்சியை தற்போது அத்திரைப்படத்தின் இயக்குனர்கள் ருஸ்ஸோ பிரதர்ஸ் வெளியிட்டுள்ளனர். தனுஷ் இன்ட்ரோ ஆகும் காட்சியாக அது இருக்கும் என தெரிகிறது.
தனுஷ் ஒரு அறைக்குள் நுழைந்து கதாநாயகனை கத்தியால் குத்தி, இருவருடனும் வெறித்தனமாக சண்டையிடுகிறார். இந்த காட்சி அற்புதமான சண்டைக் காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது. தனுஷ் நடிப்பு வேற லெவலில் உள்ளது. ஒவ்வொரு பார்வையும் வில்லத்தனத்துடன் ஸ்டைலாக உள்ளது.
“தி எக்ஸ்டிராடினரி ஜார்னி ஆஃப் ஃபகீர்” என்ற திரைப்படம் மூலம் தான் தனுஷ் ஹாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். இந்திய திரையுலகமே அவரை “ஆ” என பார்த்தது. அதன் பின் ஹிந்தி, தமிழ் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் தான் “தி கிரே மேன்” திரைப்படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்ற சுவாரசியமான தகவல் வந்தது. அதனை தொடர்ந்து இத்திரைப்படம் குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.
ரசிகர்கள் காத்திருந்தது போல் “தி கிரே மேன்” திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது. ஆனால் அதனை பார்த்த தனுஷ் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். ஆம்! அதில் தனுஷ் ஒரு செகண்ட் மட்டுமே வந்து போனார்.
“தனுஷ் மின்னல் மாதிரி சொயிங்க் ன்னு போயிட்டார்” என பலரும் கேலி செய்தனர். ஆனால் தற்போது ரசிகர்கள் கொண்டாடும் வகையில் வெறித்தனமாக இந்த காட்சி வெளிவந்துள்ளது. ஆதலால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். “தி கிரே மேன்” திரைப்படம் வருகிற 22 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.
Ladies and gentlemen, we give you…@dhanushkraja #TheGrayMan pic.twitter.com/abPLFxHq6B
— Russo Brothers (@Russo_Brothers) July 12, 2022