HOLLYWOOD
ஹாலிவுட் திரைப்படங்களை அடித்து தும்சம் செய்த ஆர் ஆர் ஆர்.. என்ன நடந்தது தெரியுமா?
ராஜமௌலியின் “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் பிரபல ஹாலிவுட் திரைப்படங்களையே ஓரங்கட்டிய தரமான சம்பவம் நடந்துள்ளது.
பாகுபலி இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் “ஆர் ஆர் ஆர்”. இத்திரைப்படத்தில் ஜூனியர் என் டி ஆர், ராம் சரண், ஆலியா பட் ஆகியோர் நடித்திருந்தனர்.
“ஆர் ஆர் ஆர்” திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதிலும் வெறித்தனமான வெற்றியை பெற்றது. ரூ. 550 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ. 1200 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்நிலையில் தற்போது உலகமே திரும்பி பார்க்கும் வகையில் மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளது இத்திரைப்படம். ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமாக நடத்தப்படும் “ஹாலிவுட் கிரிடிக் அசோஷியேசன் மிட் சீசன்” விருது விழாவில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான நாமினேஷனில் நுழைந்தது. அதில் “Cha Cha”, “Elvis”, “Everything Every Where All At Once”, “Marcel”, “Batman” “The North Man”, “Maasive Talent”,”Top Gun Maverick”, “Turning Red” ஆகிய பிரபல திரைப்படங்கள் நாமினேஷனில் போட்டியிட்டன.
இந்நிலையில் “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் இந்த பிரபல திரைப்படங்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு ரன்னர் அப் வரை வந்துள்ளது. இந்த சாதனையை உலகமே “ஆ” என வாயை பிளந்து பார்த்து வருகிறது.
மேலும் சிறந்த திரைப்படத்திற்கான “ஹாலிவுட் கிரிடிக் அசோஷியேசன் மிட் சீசன்” விருதை “Everything Every Where All At Once” என்ற திரைப்படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
And the winner of the HCA Midseason Award for Best Picture goes to…
Everything Everywhere All At Once
Runner up: RRR #HCAMidseasonAwards #A24 #EverythingEverywhereAllAtOnce @A24 @EEAAOA24 pic.twitter.com/PMrxkgWVQ1
— Hollywood Critics Association (@HCAcritics) July 1, 2022