TELEVISION
ராக்கி பாய் VS ராஜூ பாய்.. யார் ஜெயிச்சாங்க தெரியுமா?
குக் வித் கோமாளியில் ராக்கி பாய்க்கும் ராஜூ பாய்க்கும் கடுமையான போட்டி நிலவி வந்தது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியில் சென்ற வாரம் Ticket to Finale வாரமாக அமைந்தது. அதில் டாப் 5 குக்குகளான அம்மு அபிராமி, ஸ்ருத்திகா, தர்ஷன், வித்யூலேகா, முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் கோமாளிகளாக பாலா, குரேஷி, சுனிதா, மணிமேகலை, சிவாங்கி ஆகியோர் பங்கேற்றனர். கோமாளிகளான சுனிதா அஞ்சான் திரைப்படத்தில் சூர்யா ஏற்று நடித்த ராஜூ பாய் கதாப்பாத்திரத்தில் வந்திருந்தார். அதே போல் குரேஷி கே ஜி எஃப் ராக்கி பாய் கதாப்பாத்திரத்தில் வந்திருந்தார்.
குரேஷி ராக்கி பாயாக வந்த போது அவரை அதிர்ச்சி அருண், பரத் ஆகியோர் அவரை வைத்து செமத்தியாக ஸ்கோர் செய்தார்கள். ராக்கி பாய்க்கு பில்ட் அப் ஏத்த கே ஜி எஃப் திரைப்பட வசனங்களை சொல்லி கேலி செய்து கொண்டிருந்தனர். அதிர்ச்சி அருண் அடிக்கடி குரேஷியின் குறுக்கே சென்றுக் கொண்டே இருந்தார். அப்போதெல்லாம் “உங்களுக்கு ஒரு யோசனை சொல்றேன். அவன் குறுக்க மட்டும் போய்டாதீங்க சார்” என்ற வசனத்தை பேசிக் கொண்டே இருந்தது கலகலப்பாக இருந்தது.
மேலும் ராஜூ பாயாக வந்த சுனிதா, வழக்கம் போல் தமிழ் தெரியாமல் அஞ்சான் பட பாடலை பாடியது குபீர் சிரிப்பை ஏற்படுத்தியது. ஸ்ருத்திகா சிறப்பாக சமைத்து இறுதிச் சுற்று போட்டிக்கான டிக்கெட்டை கைப்பற்றிக் கொண்டார். இதனால் அடுத்த எலிமினேஷன் வாரத்திலும் அரை இறுதிச் சுற்றுக்கான வாரத்திலும் ஸ்ருத்திகா போட்டியிட அவசியமில்லை. அவர் நேரடியாக இறுதிச்சுற்று செல்கிறார். அடுத்த எலிமினேஷன் வாரத்தில் யார் எலிமினேட் ஆவார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.