Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

அனல் கிளப்பி பறந்த “ராக்கெட்ரி”..  A short review

REVIEW

அனல் கிளப்பி பறந்த “ராக்கெட்ரி”..  A short review

நடிகர் மாதவன் இயக்கி நடித்த “ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்” திரைப்படம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.

தனது நாட்டின் மேல் மிகவும் பற்றோடு இருக்கும் இஸ்ரோ சைன்டிஸ்ட் நம்பி நாராயணனின் மேல், ராக்கெட் ரகசியத்தை அண்டை நாட்டிற்கு விற்றுவிட்டார் என தேச துரோக குற்றம் சாட்டுகிறார்கள். இதனால் நம்பி நாராயணனுக்கும் அவரது குடும்பத்திற்கும் பல சிக்கல்கள் எழுகிறது. அந்த சிக்கலால் அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் பல அவமானங்களால் நேர்கிறது. இதனை நம்பி நாராயணன் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே “ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்” திரைப்படத்தின் கதை.

நம்பி நாராயணன் என்ற முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியின் உண்மை கதையை தழுவியே இத்திரைப்படம் உருவாகியுள்ளது. மாதவன் நம்பி நாராயணன் கதாப்பாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார். தனது நாட்டின் மேல் கொண்டிருக்கும் பற்றையும் தேச துரோக குற்றத்தை எதிர்கொள்ளும் தருணத்தையும் மிகவும் Balanced ஆக தனது நடிப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

 அவரது மனைவி மீனாவாக வரும் சிம்ரன், யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கணவருடன் காதல் கொள்ளும் காட்சிகளில் பார்வையாளர்களை கவர்கிறார். ரவி ராகவேந்திரா, கார்த்திக் குமார், மிஷா கோஷல் என பலரும் தங்களது கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நடிகர் சூர்யா முக்கியமான கேமியோ ரோலில் கலக்கி இருக்கிறார்.

படத்தின் பலமே வசனங்கள் தான். “ஒரு நாயை கொல்ல வேண்டும் என்றால் அது வெறி நாய் என கூறினால் போதும்” என்று படத்தில் வரும் வசனம் பளீச்சென நமது நிதர்சனத்தை காட்டுகிறது. திரைக்கதையை எந்த வித சலிப்பும் தட்டாமல் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் மாதவன்.

திரைப்படத்தின் இன்னொரு ப்ளஸ் இசையும் ஒளிப்பதிவும் தான். சாம் சி எஸ்ஸின் இசையும் சிர்சாவின் ஒளிப்பதிவும் திரைப்படத்தில் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்திருக்கிறது. பிஜித் பாலாவின் எடிட்டிங் பிசிறு தட்டாமல் திரைப்படத்தின் விறுவிறுப்புக்கு ஏற்ப கச்சிதமாக காட்சிகள் கோர்க்கப்பட்டிருக்கிறது. திரைப்படத்தில் இடம்பெற்ற பிரம்மாண்ட காட்சிகள் VFX என்றே தெரியாத அளவிற்கு செய்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் தான் ஒரு சாக்லேட் பாய் மட்டும் இல்லை, ஒரு நல்ல இயக்குனரும் கூட என நிருபித்து உள்ளார் மாதவன்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in REVIEW

To Top