Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“விக்னேஷ் ஹாப்பி அண்ணாச்சி”… RJ விக்னேஷின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்

TELEVISION

“விக்னேஷ் ஹாப்பி அண்ணாச்சி”… RJ விக்னேஷின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்

பிரபல youtuber ஆர் ஜே விக்னேஷ் காந்த்-ன் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

சினிமாவில் பிரபலமாவதற்கு ஒரு பெரிய பாதை அமைத்துக் கொடுத்த விஷயமாக Youtube தளம் அமைந்து வருகிறது. பல Youtuber-கள் தற்போது சினிமா நடிகர்களாக மக்கள் மனதை கவர்ந்து வலம் வருகின்றனர்.

அப்படி Youtube channel மூலம் மக்களுக்கு பிரபலமாக அறியப்பட்டவர் RJ விக்னேஷ். இவர் “Black sheep” என்ற Youtube channel-ஐ நடத்தி வருகிறார். இவரது Youtube channel, நான்கு மில்லியன் subscriber-களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

விக்னேஷின் கலகலப்பான பேச்சும் சரளமாக அவர் செய்யும் On spot காமெடிகளும் ரசிகர்களை பெரிதும் கவரக்கூடியது. இவர் “நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு, ஓடு ராஜா”, “தேவ்”, “மீசைய முறுக்கு” போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் பல திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். அது மட்டுமல்லாது பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் பங்கு பெற்று வருகிறார். RJ விக்னேஷை தெரியாத இணையவாசிகளே இல்லை எனலாம். அந்த அளவுக்கு Youtube உலகில் பிரபலமானவர்.

இந்நிலையில் சமீபத்தில் RJ விக்னேஷ் காந்திற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நிச்சயதார்த்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் “சிம்ப்பிளாக நிச்சயதார்த்த நிகழ்ச்சி முடிவடைந்தது. திருமணத்திற்கு அனைவரையும் வரவேற்கிறேன். திருமண தேதி பின்னால் அறிவிக்கப்படும்” என பதிவிட்டுள்ளார்.

அப்புகைப்படங்களில் கமெண்ட்டுகளில் “ஜோடி பொருத்தம் சூப்பர்”, “திருமணத்தில் வாழ்த்துகள்” “என்ன இப்படி திடீர்ன்னு சர்ப்ரைஸ் கொடுக்குறீங்களே” என பலரும் RJ விக்னேஷ்க்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இவரது நிச்சயதார்த்த விழாவில் அவரது நெருங்கிய வட்டத்தினர் மற்றும் சில youtuber-கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

 

 

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in TELEVISION

To Top