GOSSIPS
“பைக்” நடிகருக்கே விபூதி அடிக்க நினைத்த இயக்குனர்….
“பைக்” நடிகருக்கே விபூதி அடிக்க நினைத்துள்ளாராம் அந்த இயக்குனர். ஆனால் நடிகர் உஷார் ஆகி உள்ளாராம்.
“பைக்” நடிகர் தற்போது “V” என்ற எழுத்தில் தொடங்கும் படத்தில் நடித்து வருகிறார். சென்ற திரைப்படமும் “V” என்ற எழுத்தில் தொடங்கியதால் அதே போல் இத்திரைப்படமும் அதே எழுத்தில் தான் தொடங்கும் என செய்திகள் வருகின்றன.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருந்த வேளையில் அந்த “பைக்” நடிகர் திடீரென உலகம் சுற்றும் வாலிபனாக மாறிவிட்டார். “இவர் என்ன படம் நடிக்காமல், ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார்” என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
இந்நிலையில் தற்போது இது குறித்த ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது இது வரை எடுத்த காட்சிகள் எல்லாம் சூப்பராக இருந்ததாம், ஆனால் கிளைமேக்ஸில் இயக்குனர் தனது வேலையை காண்பித்து விட்டாராம்.
கிளைமேக்ஸ் ஏதோ ஒரு ஹாலிவுட் படத்தின் காப்பி என தெரிய வந்ததாம். இதனை கேள்விப்பட்ட “பைக்” நடிகர் டைரக்டரை வெளு வெளு என வாயால் வெளுத்து விட்டாராம். அதன் பின் Cool ஆகிய “பைக்” நடிகர், படம் வெளியாவதில் தாமதம் ஆனாலும் பரவாயில்லை. பொறுமையாக யோசித்து கிளைமேக்ஸ் காட்சியை எழுதவும் என டைரக்டருக்கு அட்வைஸை போட்டு விட்டு பைக்கை எடுத்துக் கொண்டு சுற்றுலா கிளம்பி விட்டாராம்.
இதனால் சோகத்தில் இருந்த இயக்குனர், தற்போது மும்முரமாக கிளைமேக்ஸ் காட்சிகளை எழுதி வருகிறாராம். படம் வருகிற பண்டிகை நாள் அன்று வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில் இச்செய்தி தயாரிப்பாளரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாம். இது தான் “பைக்” நடிகர் திடீரென்று உலகம் சுற்ற காரணம் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.