TELEVISION
ராஜா ராணி சீரியலில் இருந்து விலகுகிறாரா இவர்?… ஷாக்கிங் நியூஸ்
ராஜா ராணி சீரியலில் இருந்து முக்கிய கதாப்பாத்திரம் விலக உள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளிவந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ராஜா ராணி 2” சீரியல் ரசிகர்களின் மனதை கவர்ந்த சீரியல் ஆகும். இதற்கு முன் “ராஜா ராணி”முதல் பாகத்தை விட இது அதிக சுவாரஸியமும் திருப்பங்களும் நிறைந்ததாக பல ரசிகர்களால் கூறப்படுகிறது.
இந்நிலையில் “ராஜா ராணி2” சீரியலில் வில்லியாக வந்து கலக்கி வரும் அர்ச்சனா இத்தொடரில் இருந்து வெளிவரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் சமீபத்தில் கூட ராஜா ராணி தொடருக்கான விஜய் தொலைக்காட்சி விருதை வென்றார். இவர் தற்போது தொடரில் இருந்து விலகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன் “ராஜா ராணி 2” சீரியலில் கதாநாயகியாக நடித்த ஆலியா மானசா கர்ப்பமாக இருப்பதன் காரணமாக தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக ரியா விஸ்வநாத் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் அர்ச்சனா இத்தொடரில் இருந்து வெளிவரவிருப்பதாக கூறப்படுகிறது.
“ராஜா ராணி 2” தொடர் சுவாரசியமான கதைக்களத்தை கொண்டது. சந்தியா கதாப்பாத்திரம் ஐபிஸ் ஆக வேண்டும் என்ற கனவில் இருக்க அவளின் தந்தை மற்றும் தாய் இறந்து போகிறார்கள். அதன் பின் அவள் தன் சகோதரன் கட்டாயத்தின் பேரில் சரவணன் என்பவனை திருமணம் செய்து கொள்கிறாள். தனக்கு வரப்போகிற மருமகள் படித்த பெண்ணாக அல்லாமல் குடும்பத்தை நன்றாக நடத்து பெண்ணாக இருக்க வேண்டும் என்பது சரவணனின் தாயார் ஆசை. சந்தியா படித்த பெண் என்று சரவணனின் தாயிற்கு தெரிய வர சந்தியா மீது வெறுப்பை உமிழ்கிறார். இந்நிலையில் சந்தியா தன் மாமியாரிடம் நல்ல பெயர் வாங்குகிறாரா இல்லையா என்பதும் மாமியாரின் தடங்களில் இருந்தும் சந்தியா தன்னை காத்துக் கொள்கிறாரா என்பதும் தான் தொடரின் கதை.