TELEVISION
“டேய் பாலா, என் கிட்ட வச்சிக்காத”… ராகுல் தாத்தா எச்சரிக்கை
என்னிடம் உன் வேலையை காட்டாதே என குக் வித் கோமாளி பாலாவை எச்சரித்துள்ளார் ராகுல் தாத்தா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் சீசன் 3 கடந்த வாரம் நிறைவடைந்தது. இதில் ராகுல் தாத்தா, மனோ பாலா, அந்தோனி தாஸ், கிரேஸ், தர்ஷன், சந்தோஷ், ரோஷினி, ஸ்ருத்திகா, அம்மு அபிராமி, முத்துக்குமார், சுட்டி அரவிந்த், வித்யூலேகா ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் சிறப்பாக சமைத்து ஸ்ருத்திகா இந்த சீசனின் டைட்டிலை வென்றார். இந்நிலையில் இதில் கலந்து கொண்ட ராகுல் தாத்தா சமீபத்தில் ஒரு பிரபல யூட்யூப் சேன்னலுக்கு பேட்டியளித்தார்.
அதில் குக் வித் கோமாளியில் பங்குபெற்ற அனுபவம் குறித்து பேசினார். அப்போது “நானும் பாலாவும் அது இது எது நிகழ்ச்சியில் பங்குகொண்டோம். அப்போது தான் நான் பாலாவை முதன்முதலில் பார்த்தேன். அதன் பின் தான் குக் வித் கோமாளியில் பார்த்தேன்.
20 வயசு பையன் பாலா. அவனெல்லாம் என்னைய கலாய்ப்பான். நான் என் கிட்ட வச்சிக்காத பாலா, கைய உடைச்சிடுவேன் பாத்துக்கோ ன்னு சொல்லிடுவேன்” என கோபமாக கூறினார்.
குக் வித் கோமாளி பாலா பலரையும் பங்கமாய் கலாய்ப்பார். அதே போல் ராகுல் தாத்தாவையும் பல முறை கலாய்த்துள்ளார். இது ராகுல் தாத்தாவை கோபப்படுத்தி உள்ளதாக தெரிகிறது.
ராகுல் தாத்தாவின் உண்மையான பெயர் உதயபானு. இவர் எம் ஜி ஆர், சிவாஜி கணேசன் ஆகிய நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி நடித்த “நானும் ரவுடி தான்” திரைப்படத்தில் ராகுல் தாத்தா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததில் பரவலாக அறியப்பட்டார். அதில் இருந்து இவரை ராகுல் தாத்தா என்று அழைக்கிறார்கள்.
