TELEVISION
ராதிகாவின் மனதை கலைத்த அம்மா… இனி என்ன முடிவு எடுக்கப் போறாங்களோ??
மும்பையில் செட்டில் ஆவதற்கு பிளான் போட்ட ராதிகாவின் மனதை லேசாக கலைத்துள்ளார் அவரது அம்மா.
ராதிகா தன்னுடய காதலரான கோபி பாக்கியாவின் கணவர் என்று தெரிந்ததும் கோபியை ஒதுக்கியே வந்தார். கோபி பல முறை ராதிகாவை சமாதானப்படுத்த வந்தாலும் ராதிகா விரட்டிக் கொண்டே இருந்தார்.
இந்த நிலையில் தான் ராதிகாவின் முன்னாள் கணவருக்கும் கோபிக்கும் சண்டை வந்தது. அதனை தொடர்ந்து ராதிகா முன்னாள் கணவர் கோபியின் வீட்டிற்கு சென்று உண்மையை கூறிவிட்டார். இதை கேள்விப்பட்ட கோபிக்கு ஆக்சிடன்ட் ஆனது.
அதன் பின் கோபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது கோபியை பார்க்க ராதிகா வந்ததை பாக்கியா பார்த்துவிட்டார். தனது கணவர் ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார் என தெரிந்தும் விட்டது. இதனால் பாக்கியாவின் தலையில் இடி மேல் இடி விழுந்தது.
கோபி மருத்துவனையில் இருந்து குணமாகி வீட்டிற்கு சென்றார். அப்போது பாக்கியா அவரை மடக்கி ராதிகாவும் அவரும் தொடர்பில் இருக்கும் விஷயத்தை குடும்பத்தின் முன் போட்டு உடைத்தார். இதனை கேட்டதும் குடும்பத்தினர் ஷாக் ஆகியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது புதிய புரோமோ ஒன்று வெளிவந்துள்ளது. அதில் ராதிகா “நான் நிச்சயமாக வெளியூருக்கு சென்றே தீர்வேன்” என்று கூற அதற்கு ராதிகாவின் அம்மா “உனக்கு கோபியை பிடித்திருக்கிறதா?” என கேட்க, அதற்கு ராதிகா “பிடித்திருந்தது” என கூறுகிறார்.
அதன் பின் ராதிகாவின் அம்மா” பாக்கியா விஷயத்தை தவிர கோபியிடம் வேறு பிரச்சனை இல்லை. அவர் உன் மேலயும் உனது மகள் மேலயும் அன்பாக இருக்கிறாரே? வேறு எந்த விதத்தில் அவர் உன்னுடன் வாழ தகுதி இல்லை என நினைத்துக் கொண்டிருக்கிறாய்?” என கேட்கிறார்.
இதனால் ராதிகா மிகவும் குழப்பம் அடைகிறார். ராதிகா வெளியூர் செல்வாரா? அல்லது கோபியை திருமணம் செய்து கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.