TELEVISION
படப்பிடிப்பில் ஏற்பட்ட விபரீதம்; வழுக்கி விழுந்த ரக்சிதா: ஐயோ பாவம்!
சின்னத்திரை நடிகை ரக்சிதா மஹாலட்சுமி ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட விபரீதத்தில் வழுக்கி விழுந்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” பாகம் 2 தொடரில் மக்களின் மனதை கொள்ளையடித்து போனவர் ரக்சிதா. ஹிட் மெட்டிரீயலாக வலம் வந்த “சரவணன் மீனாட்சி” பாகம் 2 தொடரில் மீனாட்சியாக வந்து இளைஞர்களின் மனதையும் கிள்ளி விட்டு போனார்.
இவர் அதன் பின் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீசன் 2-லும் நடித்தார். அதனிடையே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் “நாட்சியார் புரம்” என்ற தொடரில் நடித்தார். அதனை தொடர்ந்து கலர்ஸ் தமிழில் “அம்மன்” தொடரிலும் நடித்தார்.
இதனிடையே பல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களிலும் கன்டஸ்டன்ட்டாகவும் சில ஷோக்களில் நடுவராகவும் கூட பங்கேற்றுள்ளார். மேலும் பல தொலைக்காட்சித் தொடர்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார்.
தற்போது இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் “இது சொல்ல மறந்த கதை” என்ற தொடரில் நடித்து வருகிறார். கணவன் ஒரு விபத்தில் உயிரிழக்க அந்த விபத்துக்கே அவரின் கணவன் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுகிறது. கணவன் மேல் விழுந்த பொய்யான குற்றச்சாட்டை கலைக்கவும் தனது இரண்டு குழந்தைகளை வளர்க்கவும் போராடும் ஒரு தாயின் கதை தான் “இது சொல்ல மறந்த கதை”.
இதில் ரக்சிதா, சாதனா என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இத்தொடரின் படப்பிடிப்பில் மழை பெய்கிற போது ரக்சிதா குடை பிடித்து மழையில் நடந்து செல்வது போல் ஒரு காட்சியை படம் எடுத்திருக்கிறார்கள். அப்போது ரக்சிதா மழை தண்ணீரில் வழுக்கி கீழே விழுந்தார்.
இக்காட்சியை தனது இன்ஸ்டா பதிவில் பகிர்ந்த ரக்சிதா, அதில் “கஷ்டத்தை அவள் தேடி போகவில்லை, கஷ்டம் தான் அவளை தேடி வருகிறது. பாத்துக்கோ சாதனா, இன்னும் பல கஷ்டங்களை நீ எதிர்கொள்ள வேண்டியது வரும்” என பகிர்ந்துள்ளார்.
அதாவது இக்காட்சி இத்தொடரிலேயே இடம்பெற்ற காட்சி போல் தெரிகிறது. அவரின் இன்ஸ்டா பக்கத்தில் “இந்த காட்சி எனக்கு பிடித்திருந்தது” என்றும் “நீங்கள் மிகவும் கடினமாக உழைக்கிறீர்கள்” எனவும் பல கமெண்ட்கள் வந்த வண்ணம் உள்ளன.
View this post on Instagram