TELEVISION
“ஸ்ருதிகா என் கணவனை கடத்திட்டு வந்துட்டா” பங்கமாய் கலாய்த்த குரேஷி..
“குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் குரேஷி ஸ்ருதிகாவை போல் மீண்டும் வேடமிட்டு வந்து அசத்தி உள்ளார்.
தமிழ்நாட்டின் ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்று அறியப்படும் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் 3 ஆவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வருகிறது. சென்ற வாரம் எதிர்பாராத விதமாக கிரேஸ் எலிமினேட் ஆனார்.
இந்த வாரம் “குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியின் புரோமோக்கள் வெளிவந்துள்ளன. இந்த வாரம் Friends and Family வாரம் என தெரிய வருகிறது. குக்குகள் தங்களின் நண்பர்களுடனும் குடும்ப உறுப்பினர்களுடனும் தென்படுகின்றனர். இந்த வாரம் கலக்கலாக போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த புரோமோவில் குரேஷி ஸ்ருத்திகாவை போல் மீண்டும் கெட் அப் போட்டு வருகிறார். சில வாரங்களுக்கு முன் குரேஷி ஸ்ருத்திகா போல் கெட் அப் போட்டு வந்து பங்கமாய் கலாய்த்து தல்ளினார். ஸ்ருத்திகாவின் நடை, உடை, பாவனையை அப்படியே காமெடியாக பிரதிபலித்திருந்தார்.
இந்த வாரம் தனது கணவர் அர்ஜூனுடன் ஸ்ருத்திகா வந்திருந்த நிலையில், மீண்டும் குரேஷி ஸ்ருத்திகா கெட் அப் போட்டு வந்திருக்கிறார். வந்தவுடன் ஸ்ருத்திகாவின் கணவர் அர்ஜூனை கட்டிபிடித்து “அர்ஜூன் என்னை காரில் வெயிட் செய்ய சொன்னான். ஆனால் நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் அர்ஜூன காணும்” என சொல்லிவிட்டு ஸ்ருத்திகாவை பார்த்து “எங்க வீட்டு வேலைக்காரி கடத்திட்டு வந்துட்டா சார்” என பங்கமாய் கலாய்த்து தள்ளினார்.
இந்த வாரம் Friends and Family வாரம் என்பதால் வழக்கத்தை விட கலகலப்பாக நிகழச்சி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.