GOSSIPS
ஹாலிவுட் இயக்குனரின் காலிலேயே விழப்போன தயாரிப்பாளர்.. ஐய்யோ பாவம்!
விட்டுப் போன திரைப்படத்தை மீண்டும் எடுக்க கோரி அந்த “ஹாலிவுட்” இயக்குனரின் காலிலேயே விழ தயாராக இருக்கிறாராம் அந்த தயாரிப்பாளர்.
தமிழின் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கி “ஹாலிவுட்” இயக்குனர் என்று பெயர் வாங்கியிருக்கும் அந்த இயக்குனர் தற்போது வேறு மாநிலத்தில் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இதனிடையே “குழப்ப” நடிகர் நடித்து பாதியில் ட்ராப் ஆன அந்த திரைப்படத்தை மீண்டும் உருவாக்க அந்த தயாரிப்பாளர் வேகம் காட்டி வருகிறாராம். அதாவது சமீபத்தில் “குழப்ப” நடிகர் நடித்த அந்த திரைப்படம் மாஸ் லெவல் ஹிட் ஆனதின் சூட்டோடு சூட்டாக இந்த திரைப்படத்தையும் கூடிய விரைவில் முடித்து வெளியிட்டு நன்றாக கல்லா கட்டி விடலாம் என தயாரிப்பாளர் நினைத்திருக்கிறாராம்.
ஆதலால் புயல் வேகத்தில் அத்திரைப்படத்தை முடிக்க செயல்பட்டுக் கொண்டிருக்கிறாராம் அந்த தயாரிப்பாளர். அதாவது நேராக “ஹாலிவுட்” இயக்குனரையே சந்தித்து கெஞ்சி கூத்தாடி காலில் விழுந்தாவது இத்திரைப்படத்தை முடித்து விட வேண்டும் என முடிவெடுத்து அவருக்கு தொல்லைக் கொடுத்து வருகிறாராம்.
அது மட்டும் அல்லாது தனது சமீபத்திய வெற்றியால் குஷியாக திரியும் “குழப்ப” நடிகர் அடுத்தடுத்த திரைப்படங்களில் இதே வெற்றியை ஈட்ட வேண்டும் என நினைத்து செயல்பட்டுக் கொண்டு இருக்கையில் அவரையும் எப்படியாவது இதனை முடித்துக் கொடுத்து வேறு திரைப்படத்திற்கு செல்லுங்கள் என Pressure கொடுத்து வருகிறார்களாம். இதனால் “குழப்ப” நடிகரும் குழப்பத்தில் உள்ளாராம்.
“எப்படிப்பட்ட தயாரிப்பு நிறுவனம், ஆனால் இப்படி கெஞ்சும்படி நிலைமை ஆகிடுச்சே” என கோலிவுட் வட்டாரங்களில் பலரும் கிசுகிசுக்கின்றனராம்.
