GOSSIPS
“பூச்சி” நடிகர் படத்துக்கு ஆப்பு வைத்த தயாரிப்பாளர்.. அய்யோ பாவம்!!
“பூச்சி” நடிகரின் திரைப்படத்திற்கு அந்த பிரபல தயாரிப்பாளர் ஆப்பு வைத்துள்ளாராம்.
எந்த படத்தையும் விட்டு வைக்காமல் வாங்கி குவித்து வெளியிடும் அந்த பிரபல தயாரிப்பாளர் ஒரு பாலிவுட் திரைப்படத்தையும் வாங்கினார். இதனிடையே “பூச்சி” நடிகரின் படமும் அவரிடையே சிக்கிவிட்டது.
இந்நிலையில் இரண்டு திரைப்படங்களுமே ஒரே நாளில் வெளியாவதாக தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இதில் தான் ஒரு பெரிய சிக்கலே எழுந்துள்ளதாம்.
அதாவது ஒரே நாளில் தான் வாங்கி இருக்கும் இரண்டு திரைப்படங்களையும் வெளியிடுவது என்பது தொழிலுக்கு பங்கம் விளைவிப்பதாக மாறிவிடும் என சிந்தித்தாராம் அந்த பிரபல தயாரிப்பாளர். இதனால் இரண்டு திரைப்படத்தில் ஏதாவது ஒரு திரைப்படத்தை தள்ளி வைத்துவிடலாம் என முடிவெடுத்தாராம்.
இதனை கேள்விப்பட்ட அந்த பாலிவுட் படத்தின் பிரபல நடிகர் எங்கே நம் படத்தை தள்ளி வைத்துவிடுவாரோ என உடனே பேச்சுவார்த்தையில் இறங்கினாராம். “பூச்சி” நடிகர் படத்தின் தயாரிப்பாளரும் ஆஜராக, மூவரும் பேச்சு வார்த்தையில் இறங்கினார்களாம்.
பேச்சு வார்த்தையின் இடையே “பூச்சி” நடிகர் படத்தின் தயாரிப்பாளர் தன்னுடைய படத்தை அந்த தேதியில் கண்டிப்பாக வெளியிட வேண்டும் என வாதாடினாராம். அவருக்கு சமமாக அந்த பாலிவுட் பிரபலமும் வாதாடினாராம். இந்த வாதங்களிடையே அந்த பாலிவுட் பிரபலம் தனது கடைசி ஆயுதத்தை எடுத்தாராம்.
அதாவது “எவ்வளவு பணம் வேணும்னாலும் வாங்கிக்கோங்க, படத்தை அந்த தேதியில ரிலீஸ் பண்ணுங்க” என கூறினாராம். இதற்கு மேல் நம்மால் முடியாது என நினைத்த “பூச்சி” நடிகர் படத்தின் தயாரிப்பாளர் பின் வாங்கிவிட்டாராம். இதனால் “பூச்சி” நடிகரின் படம் தாமதமாக வெளியாவதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. பிரபல தயாரிப்பாளர் “பூச்சி” நடிகர் படத்திற்கு ஆப்பு வைத்து விட்டார் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
