TELEVISION
“எனக்கு அமீர் ரொம்ப பிடிக்கும்”.. பாவனியின் ஓபன் டாக்
பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் அமீர் தனக்கு ரொம்ப பிடிக்கும் என பாவனி ஓப்பனாக பேசியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த பாவனி, வொய்ல்ட் கார்டில் வீட்டிற்குள் வந்த அமீருடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்தார். இருவரும் வீட்டிற்குள் காதல் புறாக்களை போல் அலைந்து கொண்டிருந்தனர். அமீர் பல முறை பாவனிக்கு புரோபோஸ் செய்தும் வந்தார். ஆனால் அமீர் தனக்கு நல்ல நண்பன் எனவும் அமீரை தான் காதலிக்கவில்லை எனவும் நிகழ்ச்சியினிடயே பல முறை பாவனி கூறிவந்தார்.
இதனிடையே பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு நாள் அனைவரும் தூங்கிய பிறகு பாவனிக்கு அமீர் முத்தம் கொடுத்த விஷயம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. பாவனி மற்றும் அமீர் இருவருமே சிறப்பாக விளையாடி டாப் 5 வரை சென்றனர். எனினும் ராஜூ ஜெயமோகன் பிக் பாஸ் சீசன் 5 பட்டத்தை வென்றது நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 வின் புரோமோக்கள் வெளியாகி வருகின்றன. அதில் பாவனி-அமீர் ஜோடி கலக்கலாக நடனம் ஆடி பார்வையாளர்களை கொள்ளையடித்து வருகிறார்கள். நடுவர்களிடம் பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது வெளியான புரோமோவில், நிகழ்ச்சியில் ஒரு சேல்லஞ்ச் வைக்கப்படுவதாக காட்டுகிறார்கள். அதாவது ஒரு Drink-ஐ குடித்துவிட்டு அதற்கு கீழ் இருக்கும் கார்டில் இடம்பெற்றிருக்கும் கேள்விக்கு உண்மையை சொல்ல வேண்டும் என்பது தான் டாஸ்க்.
அப்போது பாவனியின் கார்டில் என்ன கேள்வி இருந்தது என தெரியவில்லை, ஆனால் அவர் கூறிய பதில் “எனக்கு அமீரை மிகவும் பிடிக்கும் ஆனால் எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும்” என பதில் சொல்லியுள்ளார். அவர் அப்படி கூறும்போது அமீர் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். எனவே பாவனியும் அமீரை காதலித்து வருகிறாரோ? என கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.