TELEVISION
படுத்த படுக்கையாகிய பாவனி.. அய்யோ! என்ன ஆச்சு?
பாவனி உடல் நலம் சரியில்லாமல் படுக்கையில் படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றை அமீர் பகிர்ந்துள்ளார்.
அமீர்-பாவனி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் காதல் புறாக்களை போல் ஜோடியாக திரிந்தவர்கள். அமீர் வெளிப்படையாகவே பாவனியை காதலிப்பதாக கூறி வருகிறார். ஆனால் பாவனி இன்னும் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை.
இருவரும் பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் ஜோடியாக நடனமாடி வருகிறார்கள். அவர்களின் நடனம் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமாகவும் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக அமைந்து வருகிறது.
சமீபத்தில் இந்நிகழ்ச்சியில் பாவனி “எனக்கு அமீர் பிடிக்கும். ஆனால் எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” என கூறினார். இதில் இருந்து பாவனிக்கும் அமீரை பிடிக்கும் என தெரிய வந்தது.
இருவரும் சேர்ந்து தற்போது பல இடங்களுக்கு டேட்டிங் செல்கிறார்கள். அப்புகைப்படங்களை இணையத்தில் அவ்வப்போது பகிர்ந்தும் வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது அமீர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு அதிர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படத்தில் பாவனி உடல் நலம் சரியில்லாத நிலையில் படுக்கையில் படுத்திருக்கிறார். அவருக்கு Drips ஏற்றுகிறார்கள்.
மேலும் அப்புகைப்படத்தில் “Get well soon madam” என குறிப்பிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். பாவனிக்கு என்ன ஆயிற்று என பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால் இது குறித்து வேறு எந்த விஷயத்தையும் அமீர் பகிரவில்லை.
அமீர்-பாவனி இருவரும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் கலக்கலாகவும் சிறப்பாகவும் நடனம் ஆடி வருகிறார்கள். அமீர் ஏற்கனவே நடன இயக்குனர் என்பதால் பாவனிக்கு பல விதமான நடனப் பயிற்சிகளை அளித்து வருகிறார். இந்நிலையில் பாவனி உடல் நலம் சரியில்லாமல் படுக்கையில் படுத்திருப்பது போன்று அமீர் வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
எனினும் பாவனி தனக்கு உடல் நலம் சரியாகி விட்டதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
