Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

CWC  பாலாவுக்கு புரோபோஸ் செய்த பார்த்திபன் பட நாயகி.. So cute..

TELEVISION

CWC  பாலாவுக்கு புரோபோஸ் செய்த பார்த்திபன் பட நாயகி.. So cute..

குக் வித் கோமாளி பாலாவை ஐ லவ் யூ என கூறி புரோபோஸ் செய்துள்ளார் “இரவின் நிழல்” திரைப்படத்தின் கதாநாயகி.

“குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான புரோமோக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த வாரம் Ticket to Finale வாரம் என தெரிய வருகிறது. இந்த வாரம் கோமாளிகள் பலரும் தமிழ் சினிமாவின் பிரபலமான கேங்கஸ்டர் கதாப்பாத்திரங்களாக கெட் அப் போட்டு வருகிறார்கள்.

இதில் குறிப்பாக பாலா ‘விக்ரம்” திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஏற்று நடித்த சந்தனம் போல் கெட் அப் போட்டு வருகிறார். இந்நிலையில் இந்த வாரம் “இரவின் நிழல்” திரைப்படத்தின் புரோமோஷனுக்காக நடிகர் பார்த்திபன் மற்றும் ப்ரிகிடா சாகா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

பார்த்திபன் எப்போதும் போல் புதுமையுடன் ஒரு வாழை இலையில் “இரவின் நிழல்” என்று எழுதி கொண்டு வருகிறார். “இரவின் நிழல் திரைப்படத்தை வாழை இலையில் பரிமாறப்போகிறார்கள்” என வெங்கடேஷ் பட் கூறுகிறார்.

மற்றொரு புரோமோவில் பாலா, “இரவின் நிழல்” திரைப்படத்தின் கதாநாயகி ப்ரிகிடாவுடன் “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா” திரைப்படத்தில் வரும் வசனத்தை விஜய் சேதுபதி போல் மிமிக்ரி செய்தார். அதற்கு ப்ரிகிடா நன்றி கூறினார்.

அப்போது ப்ரிகிடா முகத்தில் இருக்கும் மச்சத்தை பார்த்து “வரும்போது உப்மா சாப்பிட்டு வந்தீங்களா, கடுகு ஒட்டியிருக்கு” என நக்கலாக கூறினார். அதற்கு ப்ரிகிடா சிரித்துக் கொண்டே “இது என்னோட மச்சம்” என கூறினார்.

அதன் பின் பாலா விஜய் சேதுபதி வாய்ஸில் “ ஐ லைக் இட், ஐ லவ் யூ டூ” என கூறினார். அதற்கு ப்ரிகிடாவும் “ஐ லவ் யூ டூ” என வெக்கப்பட்டுக் கொண்டே கூறினார்.

                   

Continue Reading

More in TELEVISION

To Top