TELEVISION
“பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் காவ்யாவை கரெக்ட் பண்ண முடியாது போலயே”…??
காவ்யாவை எப்படியாவது தன்னுடைய காதலில் விழ வைத்து விட வேண்டும் என்று நினைத்து பார்த்தி முயற்சி செய்கிறார். ஆனால் பல்பு வாங்கியது தான் மிச்சம்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மக்களின் மனதை வென்ற “ஈரமான ரோஜாவே” சீசன் 2 தொடரில் காவ்யாவின் மனதை வெல்ல பார்த்தி முயன்று வருகிறார். அதே போல் ப்ரியா தனது கணவனான ஜீவாவிடம் அன்பு காட்டி வருகிறார்.
பார்த்தி காவ்யாவின் மனதை வெல்ல பல முறை முயற்சி செய்தும் காவ்யா வழிக்கு வருவது போல் தெரியவில்லை. காவ்யாவின் மனதுக்குள் பார்த்தியின் மீது ஓரளவு ஆசை இருந்தாலும், பார்த்தியின் தாய் “என் மகனை விட்டு பிரிய முயற்சி செய், அவனிடன் பாசத்தை காட்டாதே” என கூறியது காவ்யாவின் நினைவில் அவ்வப்போது வந்துகொண்டே இருக்கிறது.
ஜீவா காவ்யாவிடம் பார்த்தி மீது பாசமாக நடந்துகொள் என கூறியபோதும் பார்த்தியின் மேல் முழுமையாக ஈடுபாடு வரவில்லை. சமீபத்தில் கூட பார்த்தி காவ்யாவிற்கு ஐஸ் க்ரீம் ஊட்டிவிட முயன்றார். ஆனால் காவ்யா முரண்டு பிடித்தார்.
அதே போல் ஒரு பக்கம் ப்ரியா தனது கணவன் ஜீவாவிற்கு ஐஸ்கிரீம் ஊட்டிவிட்டார். ப்ரியா ஜீவாவிடம் அன்பு காட்ட நினைத்தாலும், ஜீவா முழு ஈடுபாடு காட்டுவதில்லை. பார்த்தி காவ்யாவிடம் அன்பு காட்ட நினைத்தாலும் காவ்யா ஈடுபாடு காட்டுவதில்லை.
இந்த நிலையில் காவ்யா வீட்டை மாப் போட்டு துடைத்துக்கொண்டிருந்த போது உதவி செய்யலாம் என்ற எண்ணத்தில் பார்த்தி காவ்யாவிடம் உதவி வேண்டுமா என கேட்டார். அதற்கு காவ்யா தேவை இல்லை என கூறினார். அதற்கு பார்த்தி “உண்மையில் நீ மாறிட்ட காவ்யா, உனக்குள்ள அது வந்திருச்சி” என கூறுகிறார். அதற்கு காவ்யா “எது?” என கேட்கிறார். அதற்கு பார்த்தி “Feelings” என கூறுகிறார். அதற்கு காவ்யா “எனக்கு அது எப்போதுமே வராது. அதில் நான் தெளிவாக இருக்கிறேன்” என கூறுகிறார்.
பார்த்தி என்ன செய்தாலும் காவ்யாவை கரெக்ட் செய்ய முடியவில்லை என்பது தெரிகிறது. காவ்யாவிற்கு பார்த்தி மேல் காதல் வருமா என பொறுத்திருந்து பார்க்கலாம்..