TELEVISION
“காவ்யாவுக்கு என்னைய ஏன் பிடிக்கல”..? அன்புக்கு ஏங்கும் பார்த்தி..
“காவ்யாவின் மேல் உள்ள அன்பை எவ்வளவு வெளிப்படுத்தினாலும் ஏன் அவருக்கு என்னை பிடிக்கவே இல்லை” என வருத்தத்தில் இருக்கும் பார்த்திபன்
“ஈரமான ரோஜாவே” சீசன் 2 தொடரில் காவ்யா திருமணத்திற்கு முன் ஒருவரை காதலித்தார் என்பதை அறிந்த பின் பார்த்தியின் தாயார் காவ்யாவிடம் “பார்த்தியிடம் இருந்து விலகியே இரு” என கூறினார். அதனை கேட்ட காவ்யாவிற்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது.
எனினும் பல காலமாக பார்த்தி காவ்யாவிடம் தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக பலவற்றை செய்து வருகிறார். தற்போது காவ்யாவின் துணிகளை துவைத்தார். இதனை பார்த்த பார்த்தியின் தாயார் பார்த்தியிடம் “நீ ஏன் காவ்யாவின் துணிகளை துவைக்கிறாரய்?” என கேட்க “வாஷிங் மிஷின் ரிப்பேர் ஆகிவிட்டது” என கூறினார்.
அதற்கு தாயார் “காவ்யா உன்னை துவைக்கச் சென்னாளா?” என கேட்க “அதற்கு பார்த்தி. இல்லை நானாகத்தான் துவைக்கிறேன்” என கூற அதிர்ந்து போன தாயார், காவ்யாவிடம் வந்து இதனை வருத்தத்துடன் கூறினார்.
காவ்யா இதனை தெரிந்து கொண்டவுடன் உடனே பார்த்தியிடம் “ஏன் என் துணிகளை துவைத்தீர்கள்?” என கேட்டார். அதற்கு பார்த்தி குதூகலத்துடன் “நான் ஒன்னு சென்னால் கோவிச்சிக்க மாட்டியே. கோபத்தில் கூட ரொம்ப அழகாக இருக்கிறாய்” என கூறினார்.
மேலும் “எனது அன்பு ஒரு காட்டாறு. இதனை அணை எல்லாம் போட்டு தடுக்க முடியாது” என கூறினார்.
அதனை தொடர்ந்து காவ்யா “என் சம்பந்தப்பட்ட பொருட்களை தொடக்கூடாது என ஏற்கனாவே சொல்லியிருக்கிறேன். ஏன் என் துணிகளை துவைத்தீர்கள் என கேட்டார்”. அதற்கு பார்த்தி “நீ நாள் முழுக்க படிச்சிட்டே இருக்க. உனக்கு உதவியா இருக்கட்டுமேன்னு தான் அப்படி செய்தேன். ஒவ்வொரு பொண்ணும் தனது கணவன் தனக்கு உதவமாட்டிக்கிறானே என கவலைப்படுகிறார்கள். ஆனால் நான் உனக்கு கேட்காமலே இதனை செய்கிறேன். ஆனால் உனக்கு என்னை பிடிக்கவே மாட்டிக்கிறது” என வருத்தத்துடன் கூறினார்.
இதனை கேட்ட காவ்யாவின் மனது லேசானது போல் தெரிகிறது. காவ்யா மனம் மாறி பார்த்தியை ஏற்றுக்கொள்வாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
