GOSSIPS
“ஹாலிவுட்” நடிகருடன் ஊர் சுற்றும் பக்கத்து ஸ்டேட் நடிகை.. ஓ அதான் விஷயமா?
“ஹாலிவுட்” நடிகருடன் பக்கத்து ஸ்டேட் நடிகை நெருங்கி பழகி வருகிறாராம். என்ன காரணம் தெரியுமா?
தமிழில் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் கலக்கி வரும் அந்த பிரபல நடிகர் தற்போது தமிழில் படு பிசியாக இருக்கிறார். அவர் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
இன்னும் சில படங்கள் வெளிவர தயாராக உள்ளன. இவ்வாறு படு பிசியாக இருக்கும் அந்த நடிகரை பக்கத்து ஸ்டேட் நடிகை ஒருவர் பூனை காலை சுற்றுவது போல் சுற்றி சுற்றி வருகிறாராம். இருவரும் சேர்ந்து பல இடங்களுக்கு ஒன்றாக சென்று வருகிறார்களாம்.
கோலிவுட் வட்டாரத்தில் பலரும் “என்ன இந்த நடிகை திடீரென இவருடன் சுற்றிக்கொண்டிருக்கிறாரே, என்ன விஷயம்” என சந்தேகித்து வந்தார்களாம். இந்நிலையில் அந்த நடிகையின் நோக்கம் என்ன என்று தற்போது தெரிந்துவிட்டதாம்.
அதாவது நடிகர் பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளதால் எதாவது வாய்ப்பு கிடைக்கும் என்ற நோக்கத்துடன் நடிகை நெருங்கி பழகி வருவதாக சில பேச்சுக்கள் அடிபடுகின்றன.
ஏற்கனவே நடிகர் தனது காதல் மனைவியை பிரிந்து தனியாக சுற்றிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது நடிகருடன் ஒரு திரைப்படத்தில் நடித்த அந்த பக்கத்து ஸ்டேட் நடிகை அப்படியே ஜவ்வு மிட்டாய் போல் ஒட்டிக்கொண்டுள்ளாராம். அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துமே இருவரும் சுற்றிக்கொண்டு இருக்கின்றனராம்.
“நடிகையின் நோக்கம் என்ன என்று தெரிந்தாலும் ஒரு வேளை மனைவியை பிரிந்திருக்கும் நடிகரை உஷார் செய்ய முற்படுகிறாரோ?” என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. அந்த நடிகரின் முக வசியத்திற்கு பல நடிகைகள் கவுந்துவிட்ட நிலையில் தற்போது அந்த நடிகையின் வசியத்தால் இவர் கவுந்துவிடுவாரோ? எனவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.