Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

என் மகனை எப்படியாவது காப்பாத்தனும்..? O2 movie,  A short review…

REVIEW

என் மகனை எப்படியாவது காப்பாத்தனும்..? O2 movie,  A short review…

நயன்தாரா நடிப்பில் வெளிவந்திருக்கும் O2, திரைப்படம் எப்படி இருக்கு என பார்க்கலாம்..

நயன்தாரா Lead role-ல் நடித்த “O2” திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது. தனக்கு மகனுக்கு சுவாசக் கோளாறு பிரச்சனை இருப்பதால் ஆக்சிஜன் டேங்க்கை சுமந்து கொண்டே திரியும் நிலை. ஆதலால் தனது மகனுக்கு மேல் சிகிச்சை அளிக்க நயன்தாரா கோவையில் இருந்து கொச்சிக்கு பேருந்தில் அழைத்து செல்கிறார்.

அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு பேருந்து மண்ணுக்குள் சிக்கிக் கொள்கிறது. ஆதலால் 10 மணி நேரம் தான் ஆக்சிஜன் கிடைக்கும் நிலை ஏற்படுகிறது. பேருந்தில் இருந்தவர்கள் தப்பிக்க பல முயற்சிகள் எடுக்கிறார்கள். தவிர்க்க முடியாத ஒரு கட்டத்தில் பேருந்தில் இருப்பவர்கள் நயன்தாரா மகனின் ஆக்சிஜன் டேங்கை குறி வைக்கிறார்கள். நயன்தாரா தனது மகனை காப்பாற்றினாரா? அங்கிருந்தவர்கள் தப்பித்தார்களா? என்பதே கதை.

சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த மெசேஜ்ஜுடன் தான் திரைப்படம் தொடங்குகிறது. குறிப்பாக பெரிய பெரிய வசனங்கள் எதுவும் பேச வைக்காமல் காட்சிகளாலேயே அந்த மெசேஜ்ஜை கடத்தியது படத்தின் பெரிய ப்ளஸ். அதற்காகவே இயக்குனர் ஜி எஸ் விக்னேஷை பாராட்டலாம்.

நயன்தாராவின் யதார்த்த நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது. பேருந்தில் அனைவருக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும்போது தனது மகனை நினைத்து ஏக்கப்படுவது முதல், ஒரு கட்டத்தில் மற்ற பயணிகளிடம் இருந்து தனது மகனை காப்பாற்றும் விதமாக வீரு கொண்ட தாயாக உருமாறுவது வரை ஒவ்வொரு காட்சியிலும் தனது யதார்த்த நடிப்பால் அதிரிபுதிரி செய்கிறார்.

நயன்தாராவின் மகனாக வரும் “யூட்யூபர்” ரித்விக் முதல் திரைப்படம் என்றாலும் சிறப்பாகவே செய்திருக்கிறார். திரைப்படத்தில் நடித்த ஆடுகளம் முருகதாஸ், சாரா, மறைந்த நடிகர் ஆர். என். ஆர். மனோகர், சிபி புவன சந்திரன்,  பரத் நீலகண்டன் ஆகியோர் தங்களது கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

படத்தின் பெரிய பிளஸ் தமிழின் ஒளிப்பதிவு. விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதைக்கு ஏற்றவாறு புகுந்து விளையாடி இருக்கிறார். விஷால் சந்திரசேகரின் இசை அந்த விறுவிறுப்பை மேலும் அதிகரிக்க உதவியிருக்கிறது. செல்வாவின் எடிட்டிங் பக்கா.

திரைப்படத்தின் மைனஸாக திகழ்வது திரைக்கதையின் சில இடங்களில் விறுவிறுப்பு குறைவதே ஆகும். எனினும் சில காட்சிகளால் அதனை மறக்கடித்து Boost Up செய்திருக்கிறார் இயக்குனர்

மொத்தத்தில் விறுவிறுப்பான திரைக்கதையில் சற்று தொய்வு ஏற்பட்டாலும் ஆடியன்ஸை நன்றாகவே எங்கேஜ் செய்ய மறக்கவில்லை “O2” திரைப்படம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in REVIEW

To Top