TELEVISION
ஷாருக் கானை ஓவர் டேக் செய்த விஜய் டிவி; பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு பிரபல தொடரின் வீடியோ இணையத்தில் பங்கமாய் கலாய்க்கப்பட்டு வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக பார்வையாளர்களை கவர்ந்து வரும் தொலைக்காட்சி தொடர் “ஈரமான ரோஜாவே 2”. இதில் பிக் பாஸ் கேப்ரியல் காவ்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
காவ்யா ஜீவாவை காதலித்து வர இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுப்பார்கள். அதே நேரம் காவ்யாவின் அக்கா பிரியாவிற்கு ஜீவாவின் அண்ணன் பார்த்திபனை மணம் முடிக்க வேண்டும் என முடிவு செய்வார்கள். ஆனால் திருமணம் நடைபெறும் போது பிரியாவை கடத்திக் கொண்டு போய் விடுவார்கள்.
எப்படியாவது இந்த திருமணம் நடைபெற வேண்டும் என காவ்யாவை பார்த்திபனுக்கு மணம் முடித்து வைத்து விடுவார்கள். அதே போல் திரும்பி வந்த பிரியாவை ஜீவாவிற்கு மணம் முடித்து வைத்து விடுவார்கள்.
இவ்வாறு இவர்களின் வாழ்க்கை போய் கொண்டு இருக்கும் போது காவ்யா பெங்களூரில் பரிட்சை எழுதப் போவதாக கூறுவார். தன்னுடைய தோழி தன்னுடன் துணைக்கு வருவதாக கூறுவார். எனினும் அந்த தோழியின் அன்னைக்கு உடல் நலம் சரியில்லாமல் போக, காவ்யா தனியாக செல்வார்.
பார்த்திபன் காவ்யாவிற்கு தெரியாமல் காவ்யா பயணிக்கும் பேருந்தில் பின்னால் சென்று உட்கார்ந்து கொள்வார். அப்போது கர்நாடகா பார்டரில் கலவரம் வெடிக்க அனைவரும் பேருந்தில் இருந்து இறங்கி ஓடுவார்கள். காவ்யாவும் இறங்கி ஓடி ஒரு வண்டிக்கு பின் ஒளிந்து கொள்வார்.
அப்போது காவ்யாவை தேடி வரும் பார்த்திபன் காவ்யாவின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு கலவரம் நடந்து கொண்டிருக்கும் இடத்தை தாண்டி ஓடுவார்கள். இந்த காட்சிக்கு பின்னே “உயிரே” திரைப்படத்தின் “சந்தோஷ கண்ணீரே” பாடல் ஒலிக்கும்.
தற்போது இந்த வீடியோவை நெட்டிசன்கள் பங்கமாய் கலாய்த்து வருகிறார்கள். “ஈரமான ரோஜாவே 2” தொடரில் பல இடங்களில் சினிமா பாடல்களை பயன்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
