Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

நெஞ்சுக்கு நீதி; மக்கள் என்ன சொல்றாங்கன்னு கேப்போம்..

REVIEW

நெஞ்சுக்கு நீதி; மக்கள் என்ன சொல்றாங்கன்னு கேப்போம்..

நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தினை பார்த்த மக்கள் என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் இன்று வெளியான திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”. இத்திரைப்படம் பாலிவுட்டில் வெளியான “Article 15” திரைப்படத்தின் ரீமேக் ஆகும். ஆனால் இத்திரைப்படம் ரீமேக் போலவே இல்லை. புதுவிதமாக தமிழகத்தில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை இதில் இணைத்திருக்கிறார்கள் என ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

“ஃபர்ஸ்ட் ஆஃப் அதிரி புதிரியாக இருக்கிறது” என டிவிட்டரில் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். அதே போல் மற்றொருவர் “மேக்கிங் பயங்கரமாக இருக்கிறது. சுரேஷ் சக்ரவர்த்தி நன்றாக நடித்திருக்கிறார்” என கருத்து தெரிவித்துள்ளார்.

அதே போல் “இது ரீமேக் படம் போலவே தெரியவில்லை. Nativity பக்காவாக இருக்கிறது” என கருத்து தெரிவித்துள்ளார். மற்றொருவர் “அருண்ராஜா காமராஜின் வசனங்கள் தெறியாக இருக்கிறது. அனைவரையும் சமமாக நடத்த வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ளார்.

மற்றொருவர் “உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக நடித்திருக்கிறார்” எனவும் கருத்து தெரிவித்துள்ளார். குறிப்பாக கீர்த்தி சுரேஷ் “நெஞ்சுக்கு நீதி அருமையான திரைப்படம். அதுவும் உதயநிதி ஸ்டாலின் நன்றாக நடித்திருக்கிறார். அருண்ராஜா காமராஜ் நன்றாக வேளை செய்திருக்கிறார்” என கருத்து தெரிவித்துள்ளார். இது போல் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

Continue Reading

More in REVIEW

To Top