GOSSIPS
பக்கத்து நாட்டுக்கே பொட்டியை கட்டிய அந்த நடிகை.. பாவத்த!!
பக்கத்து நாட்டில் இருந்து வந்து செட்டில் ஆகலாம் என்ற நினைப்பில் இருந்த அந்த நடிகை தற்போது தனது சொந்த நாட்டுக்கே பொட்டியை கட்டி உள்ளாராம்.
தமிழின் அந்த முக்கிய ரியாலிட்டி ஷோவில் பங்குகொண்டு இளைஞர்களை தனது அழகால் சொக்கி இழுத்த அந்த பக்கத்து நாட்டு அழகு பதுமை, ரியாலிட்டி ஷோவில் இருந்து வெளியே வந்த பிறகு திரைப்படங்கள் சிலவற்றில் தலையை காட்டினார்.
ஆனால் அத்திரைப்படங்கள் அனைத்தும் மொக்கை வாங்கிய நிலையில் எந்த தயாரிப்பாளரும் அவரை வைத்து படம் எடுக்க ரெடி ஆக இல்லையாம். பல முயற்சிகள் செய்து பார்த்தும் அவரை வைத்து படம் எடுக்க இயக்குனர்கள் மறுத்து வருகிறார்களாம்.
அம்மணி நடிப்பில் சற்று டல் தான் என்பதால் பலருக்கும் அவரை நடிக்க வைப்பதில் யோசனை வந்ததாம். ஆனால் பிரபலமாகி விட்டாரே, நடிக்க வைத்தால் இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உருவாகி கல்லா கட்டி விடலாம் என்று நினைத்தனராம். ஆனால் முதல் படத்திலேயே அவரின் நடிப்பை பார்த்த பலரும் “அய்யோ! இவரா வேண்டாம்” என ஒதுங்கிவிட்டனராம்.
அதன் பிறகு சில திரைப்படங்களில் அம்மணி தலையை காட்டி, எந்த திரைப்படமும் எடுபடாததால் தான் தயாரிப்பாளர்கள் அவரை பார்த்தாலே அரண்டு ஓடுகிறார்களாம்.
இவ்வளவு தூரம் வந்து எப்படியாவது செட்டில் ஆகிவிடலாம் என்று நினைத்த அம்மணி, இப்படி ஆகிவிட்டதே என புலம்பி வருகிறாராம். ஆதலால் இனிமேல் இங்கே இருந்து எந்த பிரயோஜனமும் இல்லை, நம் சொந்த நாட்டுக்கே பொட்டியை கட்டிவிடலாம் என தற்போது முடிவெடுத்துள்ளாராம்.
“எவ்வளவு கனவுகளுடன் வந்த அம்மணி இப்போது புலம்பிக் கொண்டு கிளம்புகிறாரே பாவம்” என கோலிவுட் வட்டாரங்களில் பல பேச்சுக்கள் அடிபடுகின்றன.
