Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“நட்சத்திர” நடிகையின் வலையில் விழுந்து ஃபினிஷான “Finisher”…

GOSSIPS

“நட்சத்திர” நடிகையின் வலையில் விழுந்து ஃபினிஷான “Finisher”…

“நட்சத்திர” நடிகையின் சாமர்த்தியத்தால் “ரவுடி” இயக்குனருக்கு கிடைத்த டபுள் ட்ரீட்..

“நட்சத்திர” நடிகை தற்போதெல்லாம் பிசினஸில் வேற லெவல் முன்னேற்றம் கண்டுள்ளாராம். சமீபத்தில் அவர் தயாரித்த “தூணிலும் துரும்பிலும்” இருக்கும் நடிகர் நடித்த திரைப்படம் சரியாக எடுபடவில்லை.

ஆனாலும் தன்னுடைய சாதுரியத்தால் சமீபத்தில் ஒரு தரமான சம்பவத்தை செய்துள்ளார். அதாவது “நட்சத்திர” நடிகை “Finisher” ஆட்டக்காரரை கன்வின்ஸ் செய்து ஒரு படத்தை தயாரிக்க வைத்து விட்டார்.

இச்சம்பவம் கோலிவுட் வட்டாரங்களில் பலரின் வாயை “ஆ” என பிளக்க வைத்துள்ளதாம். அதே போல் தனது அன்பு காதலர் “ரவுடி” இயக்குனருக்கு சமீபத்தில் “பைலட்” நடிகரை கன்வின்ஸ் செய்து படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள வைத்துவிட்டார். இதே சாதுரியத்தை பயன்படுத்தி “Finisher” ஆட்டக்காரரையும் “finish” செய்து உள்ளாராம்.

மேலும் “Finisher” ஆட்டக்காரர் தயாரிக்கும் திரைப்படத்தில் “நட்சத்திர” நடிகையே நடிக்க உள்ளார். ஆனால் அத்திரைப்படத்தை யார் இயக்குகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளதாம்.

கோலிவுட் வட்டாரத்தில் “இதில் என்ன சந்தேகம் இருக்கப்போகிறது. கண்டிப்பாக ‘ரவுடி’ இயக்குனர் தான் டைரக்ட் செய்வார்” என சில இடங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றனவாம். ஆனால் சிலரோ “Finisher”-க்கு சினிமா தயாரிப்பில் ஆசை வந்தது என்பதோ உண்மை தான், ஆனால் அந்தளவுக்கு ஒன்னும் ‘நட்சத்திர’ நடிகையிடம் மயங்கி விட மாட்டார்” என அடித்து கூறுகிறார்களாம்.

அதே போல் “Finisher”-க்கு “நட்சத்திர” நடிகை தான் மிகவும் பிடித்த நடிகையாம். இந்த விஷயமே போதும், அவரது காதலர் “ரவுடி” இயக்குனரை வைத்தே அத்திரைப்படத்தை இயக்க வைக்க வழி வகுத்திவிடுவார் எனவும் “Finisher”-ம் ஒத்துக் கொண்டுவிடுவார் எனவும் கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர். என்னவாகிலும் “நட்சத்திர” நடிகை “Finisher”-ஐ கன்வின்ஸ் செய்த விஷயம் இந்திய சினிமாத் துறையையே “ஆ” வென வாய் பிளக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in GOSSIPS

To Top