TELEVISION
மாயனை அண்ணனாக ஏற்றுக் கொண்ட சரண்யா; முடிவுக்கு வந்த விஜய் டிவி சீரீயல்
நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 சீரீயல் பல வித திருப்பங்களுடன் முடிவுக்கு வந்தது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 தொடர் பரவலாக மக்களை கவர்ந்த தொலைக்காட்சி தொடராகும். கடந்த பல நாட்களாக பல திருப்பங்களால் சென்றுக் கொண்டிருந்த தொடர் தற்போது முடிவுக்கு வந்தது.
சரண்யா ஒரு வழியாக மாயனை அண்ணனாக ஏற்றுக் கொண்டார். அதே போல் தாமரையை மாறனும் ஏற்றுக் கொண்டார். பாண்டி மீது கோபத்தில் இருந்த சரண்யா மனம் மாறிவிட்டார். மாயனின் அம்மா ஆபத்து கட்டத்தில் இருந்து மீண்டு வருகிறார்.
மஹாவுக்கு குழந்தை பிறந்து விட்டது. மஹாவை கொலை செய்ய முயற்சித்த முத்துராசுவை கார்த்திக் கைது செய்து சிறையில் அடைத்து விடுகிறார். மாயனுக்கும் மஹாவுக்கும் பிறந்து பெயர் வைக்கும் விழாவோடு குடும்பங்கள் மீண்டும் இணைந்து கடைசி எபிசோட்டை முடித்து சுபம் போட்டு விட்டார்கள். இவ்வாறு “நாம் இருவர் நமக்கு ஒருவர்” சீசன் 2 தொடர் முடிவுக்கு வந்தது.
இத்தொடரின் முதல் சீசன் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கி 2020 ஆம் ஆண்டு முடிவடைந்தது. இதில் மிர்ச்சி செந்தில், ரக்சா ஹோலா, ராஷ்மி ஜெயராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து “நாம் இருவர் நமக்கு இருவர்” தொடரின் சீசன் 2 கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கியது. இதில் மிர்ச்சி செந்தில், மோனிஷா அர்ஷாக், பிக் பாஸ் புகழ் ராஜூ ஜெயமோகன், பவித்ரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தனர். முதலில் மஹாவாக ரக்சிதா மஹாலட்சுமி தான் நடித்து வந்தார். அதன் பிறகு அவர் விலகிய பின் அவருக்கு பதிலாக தான் மோனிஷா அர்ஷாக் தற்போது அக்கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.
இந்நிலையில் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீசன் 2 தற்போது முடிவுக்கு வந்துவிட்டது.
