Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Action blaster “Mission Impossible”.. அதிரடி டிரைலர் வெளியானது

HOLLYWOOD

Action blaster “Mission Impossible”.. அதிரடி டிரைலர் வெளியானது

உலக ரசிகர்களை வெகுவாக கவர்ந்த “மிஷன் இம்பாஸிபில்” வரிசையில் புதிய திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த 1996 ஆம் ஆண்டு டாம் குரூஸ் நடிப்பில் வெளியாகி அதிரடி சாகச காட்சிகள் நிறைந்த ஆக்சன் திரைப்படமாக உலகளவில் வெளிவந்து சக்கை போடு போட்ட திரைப்படம் “மிஷன் இம்பாஸிபில்”.

இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 2000 ஆம் ஆண்டு இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவந்து தெறி ஹிட் ஆனது. அதன் பின் 2006 ஆம் ஆண்டு மூன்றாம் பாகமும் வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

“மிஷன் இம்பாஸிபில்” திரைப்பட வரிசை மிகவும் பிரபலமாக அறியப்பட்ட பிறகு இத்திரைப்பட வரிசையிலேயே பல திரைப்படங்கள் வெளிவந்து மாஸ் ஹிட் ஆனது. 2011 ஆம் ஆண்டு “கோஸ்ட் புரோடோகோல்”, 2015 ஆம் ஆண்டு “ரோக் நேஷன்”, 2018 ஆம் ஆண்டு “ஃபால் அவுட்” போன்று “மிஷன் இம்பாஸிபில்” திரைப்பட வரிசையில் பல திரைப்படங்கள் வெளிவந்து ஹாலிவுட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தது.

இதனை தொடர்ந்து “மிஷன் இம்பாஸிபில்” வரிசையில் மேலும் ஒரு திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் குஷியானார்கள். எப்போது அத்திரைப்படம் வெளிவரும் என மூன்று ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் தற்போது “மிஷன் இம்பாஸிபில்: டெத் ரிக்கோனிங்க்” பாகம் 1 திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வழக்கம் போல் “மிஷன் இம்பாஸிபில்” திரைப்பட வரிசையில் இடம்பெரும் பிரம்மாண்டம் நிறைந்த சாகச சண்டை காட்சிகளும் கார் சேஸ் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

எனினும் இத்திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஜூலை வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இத்திரைப்படத்திற்கு ஒரு வருடம் காத்துக் கொண்டிருக்க வேண்டுமா என ரசிகர்கள் விரக்தி அடைந்துள்ளனர். எனினும் மாஸான சாகச காட்சிகளுக்காகவே இத்திரைப்படத்திற்கு எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் காத்திருக்கலாம் என்றும் சில ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

“மிஷன் இம்பாஸிபில்: டெத் ரிக்கோனிங்க்” பாகம் 2 வருகிற 2024 ஆம் ஆண்டு வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in HOLLYWOOD

To Top