GOSSIPS
கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்; மொபைல் ஃபோனை தூக்கி எறிந்த “மிருக” இயக்குனர்…
“மிருக” இயக்குனர் “நட்சத்திர” நடிகரை வைத்து இயக்கும் அடுத்த திரைப்படத்தையும் கலாய்த்து வருவதால் மொபைல் ஃபோனை தூக்கி எறிந்துள்ளாராம்.
“மிருக” இயக்குனர் இதற்கு முன் இயக்கிய “மிருகம்” திரைப்படம் சரிவர எடுபடாமல் போனதால் நெட்டிசன்கள் அல்லும் பகலும் விடாது “மிருக” இயக்குனரை கலாய்த்து தள்ளினர்.
படம் வெளியாகி இரண்டு மாதங்கள் ஆகியும் கலாய் மட்டும் ஓயவில்லை. புது புது விதமாக புது புது கோணத்தில் நெட்டிசன்கள் மீம்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இதனால் அதிகமாக அப்செட் ஆகியுள்ளாராம் “மிருக” இருக்குனர். அது மட்டும் அல்லாது தற்போது “நட்சத்திர” நடிகரை வைத்து இயக்கும் படத்தையும் கலாய்த்து வருகிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு “மிருக” இயக்குனர் இயக்க இருக்கும் “நட்சத்திர” நடிகர் திரைப்படத்தின் டைட்டில் வெளிவந்தது. அதனை தொடர்ந்து அந்த டைட்டிலுக்காக வெளியிடப்பட்ட போஸ்டர் காப்பி என இணையத்தில் சர்ச்சை கிளம்பியது.
மேலும் இது பத்தாது என்று அந்த “ஆடியோ லாஞ்ச்” நடிகரின் ரசிகர்களும் “நட்சத்திர” நடிகரை வைத்து இயக்கும் திரைப்படத்தை கலாய்க்க ஆரம்பித்து வருகின்றனர். ஏற்கனவே முந்தைய படத்தின் மீது ரசிகர்கள் கொண்ட வெறுப்பால் துவண்டு போன “மிருக” இயக்குனர் தற்போது தனது அடுத்த திரைப்படம் வெளிவரவதற்கு முன்பே அதனை கலாய்த்து தள்ளுகிறார்களே என மிகவும் வெறுப்பாக இருக்கிறாராம்.
ஆதலால் “மிருக” இயக்குனர் தனது இனி கொஞ்ச நாள் சமூக வலைத்தளத்தையே எட்டிப் பார்க்க கூடாது என முடிவெடுத்து தனது மொபைலை தூக்கி எறிந்துவிட்டாராம். தற்போது ஒரு பேசிக் மாடல் மொபைலை வைத்து கொண்டு நிம்மதியாக திரைப்பட பணிகளில் மூழ்கியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றனர்.
