HOLLYWOOD
இந்திய சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய மார்வெல் சூப்பர் ஹீரோ; வைரல் புகைப்படம்
இந்திய சிறுவர்களுடன் மார்வெல் சூப்பர் ஹீரோ கிரிக்கெட் விளையாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெரெமி ரென்னர். இவர் “தி ஹர்ட் லாக்கர்”, “அமெரிக்கன் ஹஸ்ஸில்”, “மிஷன் இம்பாஸிபிள்” “அர்ரைவல்” போன்ற பல பிரபலமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் மார்வெல் திரைப்படங்களில் “ஹாக் ஐ” என்ற சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். “தோர்”, “அவெஞ்சர்ஸ்”, “அவெஞ்சர்ஸ் ஏஜ் ஆஃப் அல்ட்ரான்“, “கேப்டன் அமெரிக்கா”, “அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்”, “பிளாக் விடோவ்” போன்ற பல மார்வெல் திரைப்படங்களில் ஹாக் ஐ சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
ஜெரெமி சமீப நாட்களாக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இந்தியாவில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் என்னும் நகரில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடியதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அப்புகைப்படத்தில் அவர் பேட்டை ஓங்கி பந்தை அடிக்கிறார். ஸ்டெம்ப்பிற்கு பதிலாக செங்கல்கள் அடுக்கப்பட்டிருக்கிறது. இதில் இருந்து அது சிறுவர்கள் விளையாடும் “Street cricket” என தெரிகிறது. அதே போல் சுற்றுச்சுவரின் மேல் பலரும் அவர் கிரிக்கெட் விளையாடுவதை ரசித்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது மாலை நேரமாக தெரிகிறது. இவ்வாறு அப்புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.
அப்புகைப்படத்தை பகிர்ந்த ஜெரெமி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்..
“இந்த கிரகத்தில் கற்றுக்கொள்ள, உத்வேகப்படுத்த, கண்டறிய, என்ன ஒரு வாழ்க்கையின் ஆசீர்வாதம் இது” என மன நிறைவோடு பதிவிட்டுள்ளார். அவரது கம்மெண்ட் பகுதியில் பல இந்தியர்கள் “இந்தியாவிற்கு நல்வரவு” என பதிவிட்டு அவரை வரவேற்று வருகின்றனர்.
ஜெரெமி ரென்னர் ஏற்று நடிக்கும் ஹாக் ஐ கதாப்பாத்திரம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த கதாப்பாத்திரம் ஆகும். கடந்த ஆண்டு இவரது கதாப்பத்திரத்தின் பெயரான “ஹாக் ஐ” என்ற பெயரிலேயே ஒரு வெப் சீரீஸ் வெளிவந்து சக்கை போடு போட்டது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
