TELEVISION
திருஷ்டி பொம்மையாக உருவெடுத்த வித்யூலேகா.. சூனியம் வைத்த மணிமேகலை
மணிமேகலையின் சூனியத்தில் இருந்து தப்பிக்க திருஷ்டி பொம்மை டீசர்ட்டுடன் நிகழ்ச்சிக்கு வந்த வித்யூலேகா.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷன் வாரம். இதில் கோமாளிகள் பல கெட் அப்களில் வந்திருந்தனர்.
ஆனால் குக் வித்யூலேகா தனது டீசர்ட்டில் திருஷ்டி பொம்மையை வரைந்து கையில் எலுமிச்சம்பழ மாலையோடும் வேப்பிலையோடும் வந்திருந்தார். என்ன என்று கேட்டதற்கு மணிமேகலையின் சூனியத்தை விரட்ட என கேலியாக கூறினார்.
அதன் பின் குக்குகள் கோமாளிகளை தேர்வு செய்தனர். அதில் ரோஷினிக்கு மணிமேகலை சிக்கினார். அப்போது மணிமேகலை வித்யூலேகாவிற்கு அருகில் சென்ற போது வித்யூலேகா எலுமிச்சம்பழ மாலையை கழுத்தில் அணிந்து கையில் வேப்பிலையுடன் வந்தார்.
இதற்கு முந்தைய எலிமினேஷன் வாரத்தில் மணிமேகலை பாட்ஷா கெட் அப்பில் வந்திருந்தார். அப்போது வித்யூலேகாவையும் கிரேஸையும் குறிப்பிட்டு “இது வரை எலிமினேஷன் ரவுண்டிற்கே வராத இரண்டு பேர் இந்த வாரம் வருவார்கள்” என குறிப்பிட்டார்.
சொல்லி வைத்தார் போல் வித்யூலேகாவும் கிரேஸும் எலிமினேஷன் ரவுண்டிற்கு வந்தனர். எதிர்பாரா விதமாக கிரேஸ் எலிமினேட் ஆனார். ஆதலால் இந்த வாரம் மணிமேகலையின் சூனியத்தில் இருந்து தப்பிக்க வித்யூலேகா திருஷ்டி பொம்மை உருவப்படம் வரைந்த ஆடையுடன் கையில் வேப்பிலை மற்றும் எலுமிச்சம்பழ மாலையுடன் வந்திருந்தார்.
மணிமேகலை வித்யூலேகாவை பார்த்து “நீங்க நல்லா சமைங்க, நீங்க நல்லா சமைக்காம கோமாளிகள் தான் காரணம் ன்னு சொல்லிடுறீங்க” என சண்டை போட்டார். வித்யூலேகாவும் மணிமேகலையும் சண்டை போட்ட போது பின்னணியில் “பேய்க்கும் பேய்க்கும் சண்ட, அத ஊரே வேடிக்க பாக்குது” என்ற வசனம் ஒலிபரப்பானதும் செட்டே சிரிப்பில் மூழ்கியது.