GOSSIPS
“இனிமே அவரோட நடிக்க மாட்டேன்”.. கொதித்து எழுந்த “மேக்கப்” நடிகை.. என்ன விஷயம்??
குறிப்பிட்ட நடிகருக்கும் தனக்கும் தொடர்பு இருப்பதாக பேச்சுக்கள் எழுந்து வருவதால் இனிமேல் அந்த நடிகருடன் நடிக்க மாட்டேன் என சபதம் எடுத்துள்ளாராம் “மேக்கப்” நடிகர்
அறிமுகமான படத்தில் பேய் மாதிரி மேக் போட்டு வந்து பிரபலமாகிய அந்த “மேக்கப்” நடிகை, தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் எல்லா திரைப்படமும் ஏன் இவர் அந்த “தூணிலும் துரும்பிலும்” இருக்கும் நடிகருடனே நடிக்கிறார் என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
இந்த பேச்சுக்களால் கடும் கோபத்தில் இருக்கிறாராம் அந்த நடிகை. இது குறித்து பல பேட்டிகளில் கூறினாலும் அந்த பேச்சுக்கள் மட்டும் அடங்கவில்லையாம்.
அவரையும் தன்னையும் இணைத்து சினிமா வட்டாரங்களில் பல கிசுகிசுக்கள் கிளம்பி வருவதால் கொதித்து எழுந்துள்ளார் அந்த நடிகை. இதனால் வெறுத்துப்போய் உள்ள அவர் இனிமேல் அந்த நடிகருடன் நடிப்பதை குறைத்துக் கொள்ளப் போவதாக முடிவெடுத்துள்ளாராம்.
சமீபத்தில் கூட அந்த நடிகர் “குழப்ப” நடிகருக்கு ஒரு படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். மேலும் இவரது விக்கிப்பீடியாவை தட்டிப் பார்த்தாலே அந்த நடிகருடன் தான் அதிகமாக நடித்துள்ளதாக தெரியவருகிறதாம்.
ஆதலால் அவர் கலந்து கொள்ளும் பேட்டிகளில் இது குறித்து தான் அதிகமாக கேட்கப்படுகிறதாம். இதனால் ஏற்கனவே கடும் விரக்தியில் இருந்த நடிகைக்கு தற்போது இந்த பேச்சுக்கள் அதிகமாகியுள்ளதாகவும் தேவையில்லாத கிசுகிசுக்கள் அவரது காதுகளுக்கு வருவதாலும் அந்த நடிகருடன் இனி நடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்துள்ளாராம். இவ்வாறு கோலிவுட் வட்டாரங்களில் அந்த நடிகையை பற்றி கிசுகிசுக்கப்படுகின்றது.