GOSSIPS
தயாரிப்பாளருக்கு டிமிக்கி கொடுத்த “உளறு வாய்” நடிகை.. சோகத்தில் தயாரிப்பாளர்
பாலிவுட்டின் முன்னணி நடிகையான “உளறு வாய்” நடிகை சமீபத்தில் நடித்த படம் அதள பாதாள தோல்வியை கண்டுள்ளதால் தயாரிப்பாளரின் நிலைமை அதோ கதியாக ஆகியுள்ளது.
16 வருடங்களுக்கு முன் பாலிவுட்டில் அறிமுகமான அந்த நடிகை, பல திரைப்படங்கள் நடித்து பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். பாலிவுட்டிலேயே அவார்டுக்கு பேர் போன நடிகை அவர்.
இதுவரை 4 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். தமிழில் கூட ஒரு முக்கிய நடிகரின் திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அத்திரைப்படமும் எடுபடவில்லை அதன் பின் அவருக்கு தமிழில் வாய்ப்பும் அமையவில்லை.
எனினும் அவர் சமீப காலமாக எதாவது பேட்டிகளில் அடிக்கடி சர்ச்சையாக பேசி வாய் விட்டு “உளறு வாய்” நடிகையாக மாறினார். சில ஆண்டுகளுக்கு முன்பு கூட தமிழகத்தின் முக்கிய அரசியல் புள்ளியின் Biopic-ல் கூட நடித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் “உளறு வாய்” நடிகை கேங்க்ஸ்டராக ஒரு திரைப்படத்தில் நடித்தார். அத்திரைப்படத்தின் பட்ஜெட் 100 கோடி என கூறப்படுகிறது. ஆனால் அத்திரைப்படம் அதள பாதாளத்தில் கவுந்து விட்டதாம். அதாவது 4 கோடி கூட கலெக்சன் ஆகவில்லையாம்.
இதனால் அந்த தயாரிப்பாளர் நடு வீதிக்கு சென்றுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் நடிகை இது குறித்து எதுவும் கவலைப் படாமல் அடுத்த திரைப்படத்தை புக் செய்து விட்டாராம். தயாரிப்பாளருக்கு ஆறுதல் கூட கூறவில்லையாம். ஹாயாக இருக்கிறாராம்.
நடிகையை நம்பி பணம் போட்டு திவாலாகி ஏற்கனவே சோகத்தில் இருக்கும் தயாரிப்பாளர், நடிகை கண்டுகொள்ளாமல் இருப்பது அவரை மேலும் சோகமாக்கியுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.