GOSSIPS
“அந்த நடிகையா அய்யோ வேண்டாம்”.. தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்.. ஏன் தெரியுமா?
“அந்த நடிகை மட்டும் வேண்டாம்” என தெறித்து ஓடுகிறார்களாம் தயாரிப்பாளர்கள். என்ன காரணம் தெரியுமா?
அந்த “குழப்ப” நடிகரின் மகள் பல ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார். South, North என பல மொழி படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து டாப் நடிகை என்ற அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார் அநத் நடிகை.
இந்நிலையில் சமீபத்தில் அவர் செய்த ஒரு காரியம் அவருக்கு ஆப்பு அடித்து உள்ளது. அதாவது சமீபத்தில் அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் தைரிய பெண்மணி என தன்னை காட்டிக் கொள்ளும் விதமாக தனக்கு இருக்கும் உடல் பிரச்சனையை பற்றி உளறிவிட்டார்.
இதனை கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அது மட்டும் அல்லாது தற்போது இவரை புக் செய்த தயாரிப்பாளர்கள் தான் பெரிய ஷாக்கில் உள்ளார்களாம்.
அவரின் உடல் பிரச்சனை வெளியே தெரிய வந்த பின் அவரை எந்த தயாரிப்பாளர்களும் அனுகுவதற்கு தயங்குகிறார்களாம். உடல் நிலை சரியில்லாமல் இருந்து ஷூட்டிங் பாழாகி போய்விட்டால் என்ன செய்வது என்பது தான் தயாரிப்பாளர்களின் கவலையாக இருக்கிறதாம்.
ஆதலால் அவரை புக் செய்த தயாரிப்பாளர்கள் பலரும் அட்வான்ஸ் பணத்தை வாபஸ் கேட்கின்றனராம். இதனால் அந்த நடிகை பெரிதும் கவலையில் ஆழ்ந்துள்ளாராம். தன் வாயை கொடுத்து தானே மாட்டிக் கொண்டோமே என கவலையில் உள்ளாராம்.
இந்தியாவின் டாப் மோஸ்ட் நடிகையாக வலம் வந்த அவருக்கு இப்படி ஒரு நிலையா? என சினிமா வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றன.
