TELEVISION
ரன்வீர் சிங், விஷ்ணு விஷாலை தொடர்ந்து டிரெஸ் போடாமல் அலையும் விஜய் டிவி பிரபலம்.. இவரும் இப்படி இறங்கிட்டாரே..
ரன்வீர் சிங், விஷ்ணு விஷால் ஆகியோரை தொடர்ந்து தற்போது KPY சரத்தும் அந்த டிரெண்டிங்கில் இறங்கியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் “பேப்பர்” என்ற இதழுக்காக சில ஃபோட்டோஷூட்டுகளை நடத்தினார். அதில் ரன்வீர் சிங் ஒட்டுத்துணி கூட இல்லாமல் பல புகைப்படங்களுக்கு விதவிதமாக போஸ் கொடுத்திருந்தார். இது பெரும் சர்ச்சையானது.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவியது. மேலும் அந்த பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில் சில கெட்ட வார்த்தைகளையும் ரன்வீர் சிங் பயன்படுத்தி இருந்தார்.
இதனை தொடர்ந்து ரன்வீர் சிங்கிற்கு எதிராக மும்பை செம்பூர் போலீஸ் நிலையத்தில் வேதிகா சௌபி என்ற வழக்கறிஞர் ஒருவர் “ரன்வீர் சிங் பொதுவெளியில் பெண்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டார்” என புகார் அளித்தார்.
அப்புகாரின் அடிப்படையில் பொது கண்ணியத்தை மீறுதல், ஆபாசமாக நடந்துகொள்ளல், பெண்களை அவமானப்படுத்துவது போல் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ரன்வீர் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷாலும் ரன்வீர் சிங் போல் உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் படுக்கையில் படுத்தவாறு ஒரு போஸ் கொடுத்தார். இப்புகைப்படமும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் இந்த ட்ரெண்டிங்கில் தற்போது KPY சரத்தும் இறங்கியுள்ளார். அவரும் விஷ்ணு விஷால் போல் உடம்பில் துணி உடுத்தாமல் படுக்கையில் படுத்தவாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படத்தின் கமெண்ட் செக்சனில் பலரும் அவருக்கு உடல் நிலை சரியில்லை என நினைத்து “Get well soon” என கமெண்ட் செய்து வந்தனர். ஆனால் அதன் பின் தான் தெரிந்தது அது டிரெண்ட் என்று. அப்புகைப்படம் இதோ..
View this post on Instagram