Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

பார்வையாளர்களை தூங்க வைத்த “காட்டேரி”? A Short review…

REVIEW

பார்வையாளர்களை தூங்க வைத்த “காட்டேரி”? A Short review…

வைபவ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் “காட்டேரி” திரைப்படம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.

தன்னையும் தனது நண்பர்களையும் ஒரு பெரிய கேங்கஸ்டரிடம் சிக்கவைத்து விட்டு புதையலை தேடிச் சென்ற கூட்டாளியை, தனது மனைவியுடனும் நண்பர்களுடனும் தேடிப் போகிறார் வைபவ். கூட்டாளியை தேடிச் செல்லும் அவர்கள் ஒரு கிராமத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த கிராமத்தில் இருப்பவர்கள் அனைவரும் பேய்கள்.

வைபவ் மற்றும் குழுவினர் அனைவரும் அந்த கிராமத்தில் இருந்து தப்பித்தார்களா? அந்த கூட்டாளி என்ன ஆனார்? அவர்களுக்கு புதையல் கிடைத்ததா? என்பதே இத்திரைப்படத்தின் கதை.

கேட்க விறுவிறுப்பாக இருக்கும் இந்த கதையை கொத்துப் புரோட்டா போல் திரைக்கதை ஆக்கியிருக்கிறார் இயக்குனர் டிகே. வழக்கமான பேய் கதை என்றாலும் சலிப்புத் தட்டும் திரைக்கதையால் பார்வையாளர்களை “உச்” கொட்டவைத்து விடுகிறார். வைபவ் ஓரளவு சிறப்பாக நடித்திருக்கிறார். கதாநாயகிகளாக வரும் ஆத்மிகா, சோனம் பாஜ்வா ஆகியோரின் கதாப்பாத்திரங்கள் சொல்லும்படியாக இல்லை. முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த வரலட்சுமி சரத்குமாரின் நடிப்பு ரசிக்கும்படி இல்லை.

மேலும் ரவி மரியா, கருணாகரன் ஆகியோரின் நகைச்சுவையும் சுத்தமாக எடுபடவில்லை. படத்தின் ஒரே பிளஸ் ஒளிப்பதிவும் பிஜிஎம்மும் தான். ஆனால் திரைக்கதையின் சொதப்பலால் அந்த இரண்டும் பார்வையாளர்களுக்கு பெரிதாக திருப்தியை கொடுக்கவில்லை.

திரைக்கதையை சற்று விறுவிறுப்பாக அமைத்திருந்தால் ஓரளவு இந்த படம் தப்பித்திருக்கும். ஆனால் படத்தின் பிளஸ்களாக அமையவேண்டிய காமெடி, காதல், சஸ்பென்ஸ் என எதுவும் சரியாக அமையாதது பெரிய சறுக்கல் தான். மொத்தத்தில் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் டிகே.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in REVIEW

To Top