GOSSIPS
“பிறந்த நாளில் அப்டேட் வராதது இதுக்கு தானா?” மனம் நொந்து போய் கிடக்கும் “இருட்டு” இயக்குனர்..
“இருட்டு” டைரக்டரின் அந்த பிரம்மாண்ட திரைப்படம் கூடிய விரைவில் வெளிவரவுள்ள நிலையில் அவரின் பிறந்த நாளில் ரசிகர்கள் அப்டேட்டிற்காக காத்திருந்தனர். ஆனால் அப்டேட் வெளிவரவில்லை. ஏன் தெரியுமா?
இருட்டிலேயே படம் எடுத்து “இருட்டு” இயக்குனர் என இந்திய அளவில் புகழ் பெற்ற அந்த “இருட்டு” இயக்குனர் தற்போது தமிழின் ஒரு முக்கிய வரலாற்றுத் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். படத்தின் ஷூட்டிங் எல்லாம் எப்போதோ முடிந்த நிலையில் தற்போது Post production பணிகள் நடந்து வருகிறது.
இதனிடையே இத்திரைப்படத்தின் கதாநாயகர்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது. ஆனால் ரசிகர்கள் “இந்த போஸ்டர்கள் என்ன இவ்வளவு கேவலமாக இருக்கு” என சமூக வலைத்தளத்தில் கலாய்த்து தள்ளினர்.
மேலும் அத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் வேறு “என்ன படம் இவ்வளவு ஸ்லோவா போகுது, இதுக்கெல்லாம் மியூசிக் போட முடியாது, மறுபடியும் எடுங்க” என கூறியது “இருட்டு” டைர்கடரை இருள் அடைய வைத்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு “இருட்டு” டைரக்டருக்கு பிறந்த நாள் வந்தது. பிறந்த நாளில் அந்த பிரம்மாண்ட திரைப்படத்தின் அப்டேட் வெளியாகுமா என ரசிகர்கள் கேட்ட வண்ணம் இருந்தனர். ஆனால் எந்த அப்டேட்டும் விடவில்லை.
அவர் அப்டேட் விடாததற்கு என்ன காரணம் தெரியுமா? அந்த பிரம்மாண்ட திரைப்படம் சரியாகவே எடுக்கவில்லை என டைரக்டரே உணர்ந்து விட்டாராம். ஆதலால் சில காட்சிகளை மாற்றி அமைக்கப்போகிறாராம். இதனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறதாம். இதனால் தான் அப்டேட் விடவில்லை என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
![](https://kollywoodgalatta.com/wp-content/uploads/2022/05/wewewew.jpg)