TELEVISION
“எனக்கு என்னோட அம்மா வேணும்”… கதறி அழும் இனியா
பாக்கியலட்சுமி தொடரில் தனது அம்மாவை நினைத்து கதறி அழுகும் இனியா.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாக்கியலட்சுமி” தொடர் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது என்று கூட சொல்லலாம்.
ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த அந்த தருணமும் வந்துவிட்டதால் இனி என்ன நடக்கும்? என ஆவலோடு காத்திருக்கின்றனர். கோபி-ராதிகாவை பற்றிய உண்மையை அறிந்த பாக்கியா கோபியிடம் எரிமலையாய் கொந்தளித்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
அதன் பின் எழிலன் அவரை தேடி சென்று பாக்கியாவிற்கு துணையாக இருக்கிறார். வீட்டில் கோபி அறையில் இருக்க இனியா தன்னுடைய தந்தையிடம் “அம்மாவை ஏன் இப்படி ஏமாற்றினீர்கள், அம்மா மிகவும் பாவம்” என கதறி அழுதார்.
அதன் பின் “இனிமேல் நான் உங்கள் முகத்திலேயே முழிக்க மாட்டேன்” என கூறிவிட்டு அறையில் இருந்து கோபமாக உணர்ச்சிவசத்தில் வெளியேறினார். தன்னுடைய மகள் இப்படி பேசிவிட்டாளே என கோபி வேதனையில் இருக்கிறார்.
இந்நிலையில் தற்போது “பாக்கியலட்சுமி” தொடரின் புதிய புரோமோ வெளிவந்துள்ளது. அதில் ஜெனியிடம் “நான் அம்மாவை பார்த்தாலே திட்டுவேன். ஆனால் அம்மா நான் எவ்வளவு திட்டினாலும் திரும்ப திரும்ப வருவாங்க. அம்மா ரொம்ப பாவம்” என கூறி அழுகிறார்.
அம்மாவின் நிலையை நினைத்து அழுகும் இனியாவை கட்டிபிடித்து ஆறுதல் சொல்கிறார் ஜெனி. இவ்வாறு இந்த புரொமோ அமைந்துள்ளது.
ஒரு பக்கம் ராதிகா வெளியூருக்கு கிளம்ப தயாராக இருக்க அவரின் அம்மா, ராதிகாவின் மனதை குழப்பிவிட்டார். இனி ராதிகா என்ன செய்யப்போகிறார் என தெரியவில்லை. கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்வாரா? இல்லை பாக்கியாவை சமாதானம் செய்வாரா? அப்படி சமாதானப்படுத்தினாலும் பாக்கியா கோபியை ஏற்றுக் கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.