Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Netflix வெப் சீரீஸிற்கு இசையமைத்த இளையராஜா.. வேற லெவல்..

HOLLYWOOD

Netflix வெப் சீரீஸிற்கு இசையமைத்த இளையராஜா.. வேற லெவல்..

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ஒளிபரப்பாகும் வெப் சீரீஸ் ஒன்றிற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உலகம் முழுவதும் சக்கை போடு போட்ட வெப் சீரீஸ் “ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ்”. 1980-களில் நடப்பது போன்ற கதையம்சம் கொண்ட இந்த வெப் சீரீஸ், ஒரு சைன்ஸ் ஃபிக்சன் வகையராவை சேர்ந்ததாகும்.

அதாவது ஒரு ஆய்வுக்கூடத்தில் செய்த ஆய்வின் விளைவால் பேரலல் யுனிவர்ஸ் என்று சொல்லக்கூடிய இன்னொரு உலகில் இருந்து ஒரு பயங்கரமான மிருகம் உலகத்துக்குள் நுழைந்து ஆட்டம் காட்டுவதே இந்த வெப் சீரீஸின் மையக் கரு.

மிகவும் சுவாரசியமாக எழுதப்பட்ட திரைக்கதையை கொண்ட முதல்  சீசனின் தொடர்ச்சியாக 2017 ஆம் ஆண்டு இரண்டாம் சீசன் வெளிவந்து பட்டையை கிளப்பியது.

அதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு மூன்றாம் சீசன் வெளிவந்தது. வருகிற மே மாதம் 27 ஆம் தேதி நான்காம் சீசனின் முதல் பாகம் வெளிவரவுள்ளது. அதனை தொடர்ந்து ஜூலை 1 ஆம் தேதி நான்காம் சீசனின் இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் இசைஞானி இளையராஜா “ஸ்ட்ரேஞ்சர்ஸ் திங்க்ஸ்” வெப் சீரீஸின் தீம் மியூசிக்கிற்கு இசையமைத்துள்ளார். இந்த வீடியோவில்  4 சிறுவர்கள் ஒரு இசையை பின்பற்றி பேரலல் யுனிவர்ஸிற்குள் சென்றுவிட அங்கே இளையராஜா இசைத்து கொண்டிருக்கிறார். அவர் இசைக்க இசைக்க மேகத்தில் வேற்று உலகத்தின் நுழைவாயில் சிறிது சிறிதாக மூடுகிறது.

இதனை தொடர்ந்து மீண்டும் நுழைவாயில் திறந்தவுடன் சிறுவர்களை அருகில் அழைக்கிறார். இவ்வாறு அந்த வீடியோ அமைந்துள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. “ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ்” வெப் சீரீஸ் தமிழிலும் காணக்கிடைக்கிறது.

                                     

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in HOLLYWOOD

To Top