Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“என்னோட வாழ்க்கையில முதல் படி இது தான்”… நெகிழ்ச்சியில் மணிமேகலை

TELEVISION

“என்னோட வாழ்க்கையில முதல் படி இது தான்”… நெகிழ்ச்சியில் மணிமேகலை

சின்னத்திரை பிரபலமான மணிமேகலை தன்னுடைய வாழ்க்கையின் முதல் படி முன்னேற்றமாக கருதும் ஒரு நிகழ்வை நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

மணிமேகலை ஆரம்ப கட்டத்தில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் VJ ஆக தனது கேரியரை தொடங்கினார். அப்போதே அவருக்கு ஒரு Fan base உருவாகியது.

அதன் பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டிருந்தார். இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு ஹுசேன் என்ற நபரை காதலித்து பெற்றோர்கள் சம்பந்தமில்லாத நிலையிலும் திருமணம் செய்து கொண்டார்.

இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” சீசன் 1 நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார். அதன் பின் அவர் மீண்டும் பரவலாக அறியப்பட்டார்.

“குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் அடுத்தடுத்த சீசன்களில் அவரது சேட்டைகள் பயங்கரமாக இருந்தது. அவர் கோமாளிகளாக போன குக்குகள் பெரும்பாலும் எலிமினேட் ஆகி விடுவதால் அவரை சூனியக்காரி என்று கேலியாக அழைக்க ஆரம்பித்தனர். தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் “குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியிலும் அவரை சூனியக்காரி என்றே கூறி வருகிறார்கள்.

மணிமேகலையின் கணவர் ஹுசேனும் அவரும் சேர்ந்து பல கலகலப்பான வீடியோக்களை அவர்களது யூட்யூப் சேன்னலில் வெளியிட்டுக் கொண்டே வருகிறார்கள். மணிமேகலை-ஹுசேன் ஜோடிக்கென்ற தனி ரசிகர் கூட்டம் உண்டு. தம்பதியர் என்றால் மணிமேகலை-ஹுசேன் ஜோடி போல் இருக்க வேண்டும் என இணையத்தில் பலரும் பாராட்டி வருவதும் உண்டு.

இந்நிலையில் ஹுசைன்-மணிமேகலை ஜோடி அவர்களது சொந்த கிராமத்தில் ஒரு நிலத்தை வாங்கி அதில் போர் போட்டு உள்ளனர். மேலும் குறைந்த அடியிலேயே தண்ணீர் வந்ததால் இருவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனை தனது வாழ்க்கையின் முதல் படி என மணிமேகலை நெகிழ்ச்சியோடு தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)


Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in TELEVISION

To Top