TELEVISION
“நயன்தாரா மாதிரி உடை அணியனும் ன்னு நினைச்சேன்.. ஆனா”.. ஹார்த்தியின் வைரல் புகைப்படம்
நயன்தாரா திருமணத்தில் அணிந்த உடையை அப்படியே அணிந்து பார்த்த ஹார்த்திக்கு வந்த சோதனையை பாருங்க.
நகைச்சுவை நடிகை ஹார்த்தி கணேஷ் பல திரைப்படங்களில் வடிவேலு, விவேக் ஆகியோருடன் ஜோடியாக கலக்கி இருப்பார். திரைப்படங்களை போலவே சின்னத் திரையிலும் ஜொலித்து வருகிறார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பிபி ஜோடிகள்” சீசன் 2 நிகழ்ச்சியில் ஹார்த்தி-கணேஷ் ஜோடி பங்குபெற்று வருகின்றனர்.
நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி மகாபலிபுரம் ரிசார்ட்டில் வைத்து திருமணம் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், ஷாருக்கான், அனிரூத், அட்லி, சூர்யா, ஜோதிகா என திரைத்துறையினர் பலரும் கலந்து கொண்டனர்.
இதில் நயன்தாரா அணிந்திருந்த வித்தியாசமான உடை பலரையும் கவர்ந்தது. இதனை தொடர்ந்து பலரும் அது போன்ற உடையை அணிந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் “பிபி ஜோடிகள்” சீசன் 2 நிகழ்ச்சியில் Wedding Round நடைபெறுகிறது. இதில் கல்யாண ஜோடியாக ஹார்த்தி-கணேஷ் நடனமாடுகிறார்கள். இதில் ஹார்த்தி நயன்தாராவின் திருமண உடையில் தென்படுகிறார்.
இதனை தொடர்ந்து ஹார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் அப்புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் Expectation vs Reality என குறிப்பிட்டுள்ளார்.
என்ன கொடுமை இது 😆😂Expectation vs reality pic.twitter.com/MQxiaS4hib
— Actress Harathi (@harathi_hahaha) August 11, 2022
நயன்தாரா தற்போது பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் “ஜவான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே போல் விக்னேஷ் சிவன் அஜித் குமாரை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார்.
நயன்-விக்கி திருமண வைபவ வீடியோ விரைவில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெப் சீரீஸ் போல் சீசன்களாக வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.