Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

சந்தானத்தின் குலு குலு ரசிகர்களுக்கு குலு குலுவாக இருந்ததா?? டிவிட்டர் விமர்சனம்

REVIEW

சந்தானத்தின் குலு குலு ரசிகர்களுக்கு குலு குலுவாக இருந்ததா?? டிவிட்டர் விமர்சனம்

சந்தானத்தின் வித்தியாசமான நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் “குலு குலு” திரைப்படம் குறித்து ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம்.

“மாஸ்டர்”, “விக்ரம்” ஆகிய வெற்றித் திரைப்படங்களில் வசனக்கர்த்தாவாக பணியாற்றியவர் ரத்ன குமார். இவர் இதற்கு முன் “மேயாத மான்”, “ஆடை” ஆகிய திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

இந்நிலையில் இன்று ரத்ன குமார் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் “குலு குலு”. இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயின்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் இத்திரைப்படத்தை வெளியிட்டுள்ளார். இத்திரைப்படம் குறித்து சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் “எப்போதும் சந்தானம் தான் கவுன்ட்டர் அடிப்பார். ஆனால் இத்திரைப்படத்தில் சந்தானத்தை சுற்றி உள்ளவர்கள் கவுன்ட்டர் அடிக்கிறார்கள்” என கூறினார்.

இவ்வாறு சந்தானம் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்த “குலு குலு” திரைப்படம் குறித்து மக்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம்.

ஒருவர் “திரையரங்கில் பார்க்க வேண்டிய திரைப்படம், காணத் தவறாதீர்கள்” என கூறியுள்ளார்.

மற்றொருவர் “First Half சிறப்பாக இருக்கிறது. இயக்குனர் ரத்ன குமார் ஒரு Versatile இயக்குனர் என்பதை நிரூபித்துள்ளார். சந்தானம் ஒரு நாடோடியாக அனைவருக்கும் உதவும் கதாப்பாத்திரத்தில் வருகிறார். ஒரு ஜாலியான பயணம்” என கூறியுள்ளார்.

இன்னொருவர் “First Half ஒரு பெரிய சர்ப்ரைஸ். சந்தானம் வழக்கமான காமெடி டிராக்கில் இருந்து வெளியே வந்துள்ளார். ரைட்டிங் நன்றாக உள்ளது” என கூறியுள்ளார்.

ஒருவர் “சண்டைக் காட்சிகள் பயங்கரமாக உள்ளது. திரையரங்கில் பார்க்க வேண்டிய தரமான திரைப்படம்” என கூறியுள்ளார்.

மற்றொருவர் “சந்தானம் தனித்துவமாக தென்படுகிறார். இடைவேளை சண்டைக்காட்சிகள் நன்றாக இருக்கிறது. ஒளிப்பதிவும் சந்தோஷ் நாராயணனின் இசையும் நன்றாக இருக்கிறது” என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in REVIEW

To Top