TELEVISION
கார் விபத்தில் மல்லாந்த கோபி… ஒரே நேரத்தில் சந்திக்கப் போகும் இருவர்?
பாக்கியலட்சுமி தொடரில் கோபிக்கு நேர்ந்த விபத்தால் பல எதிர்பாராத டிவிஸ்டுகள் வர உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் யாரும் எதிர்பாரா விதமாக ராதிகாவின் முன்னாள் கணவர் பாக்கியலட்சுமி வீட்டிற்கு வந்து கோபி இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக சொல்லிவிட்டார்.
அதன் பின் வீட்டில் உள்ள அனைவருக்கும் இடி விழுந்தது போல் ஆனது. இதனை தொடர்ந்து எங்கிருந்தாலும் வீட்டிற்கு உடனே வர வேண்டும் என கோபியின் அம்மா கோபியை தொலைப்பேசியில் அழைத்து கூறுவார்.
அப்போது கார் ஓட்டிக் கொண்டிருந்த கோபி, ராதிகாவின் முன்னாள் கணவர் தன் வீட்டிற்கு வந்ததை கேள்விப்பட்டதும் பயத்தில் திக்கு முக்காடி விடுவார். அதனை தொடர்ந்து எதிரே லாரி வர அதிலிருந்து தப்பிக்கும் வகையில் தனது காரை திருப்ப ஒரு மரத்தில் மோதி கோபி மயங்கி விடுவார்.
அதன் பின் கோபியை மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். அப்போது ராதிகா, பாக்கியா ஆகிய இருவருக்குமே மருத்துவமனையில் இருந்து தகவல் சென்றுவிடும்.
ராதிகாவும் பாக்கியாவும் ஒரே நேரத்தில் கோபியை வந்து பார்ப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திரைக்கதையில் யாரும் எதிர்பாரா விதமாக பெரிய டிவிஸ்ட் ஒன்று பார்வையாளர்களுக்கு காத்திருப்பதாக தெரிகிறது.
கோபியின் மனைவி தான் பாக்கியா என ராதிகாவிற்கு தெரியும். ஆனால் ராதிகா தான் தன் கணவர் காதலிக்கும் பெண் என பாக்கியாவிற்கு தெரியாது. ஏற்கனவே பாக்கியாவும், ராதிகாவும் நண்பர்கள் என்பதால் தனது தோழிக்கு துரோகம் செய்யக்கூடாது என நினைத்து கோபியை விரட்டிக் கொண்டே இருக்கிறார் ராதிகா. தன்னை தேடி வரவேண்டாம் என பலமுறை கோபியை கண்டித்தும் வருகிறார்.
ஒரு கட்டத்தில் ராதிகா மும்பையில் செட்டிலாக முடிவு செய்து கொள்வார். மும்பை செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துக் கொண்டிருக்கும் வேளையில் இப்போது கோபி விபத்தில் சிக்கி உள்ளார்.