TELEVISION
“அந்த மரம் என்ன பாவம் செஞ்சுச்சோ”? வெறிகொண்டு ஆடிய கோபி..
பாக்கியலட்சுமி தொடரில் கோபத்தில் வெறிகொண்டு ஆடினார் கோபி. ஏன் தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியின் “பாக்கியலட்சுமி” தொடரில் ராதிகாவிற்கும் கோபிக்கும் இடையே உள்ள உறவு தெரிந்த பிறகு பாக்கியா வீட்டை விட்டு வெளியேறினார். பல நாட்களாக வீடு திரும்பாத பாக்கியா திடீரென வீடு திரும்பினார்.
கோபியை நீதிமன்றத்துக்கு அழைத்தார் பாக்கியா. அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் பாக்கியாவின் திறமையான பேச்சால் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கோபி பாக்கியாவை வீட்டை விட்டு வெளியேறும்படி கத்தினார். மேலும் “பாக்கியா இந்த வீட்டில் ஒரு வேலைக்காரியாகத் தான் இருந்தாள்” என அவமானப்படுத்தினார். இதனை தொடர்ந்து பாக்கியா அறைக்குச் சென்று பெட்டியை எடுத்துக்கொண்டு கீழே வந்தார்.
பாக்கியாவின் கையில் இருந்த பெட்டியை பிடுங்கி தூக்கிப் போட்டார் கோபி. திடீர் திருப்பமாக அதில் கோபியின் துணிகள் இருந்தது.
இதனை தொடர்ந்து பாக்கியா “நான் ஏன் வெளியே போக வேண்டும். நீங்கள் தான் வெளியே போக வேண்டும். உங்களுக்கு என்னை வெளியே போகச் சொல்ல உரிமை இல்லை” என கூறினார். அதே போல் கோபியின் தந்தையான ராமமூர்த்தியும் கோபியை வீட்டை விட்டு வெளியே போகும்படி கூறினார்.
இதனை தொடர்ந்து கடும் கோபத்தில் இருந்த கோபி, பெட்டியை தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டார். அதனை தொடர்ந்து காரை ஒரு ஓரத்தில் நிறுத்திய கோபி தனக்கு தானே பேசிக்கொண்டார். “எல்லாரையும் முட்டாள் என்று சொன்னியே, இப்போ நீ தான் முட்டாள்” என கொந்தளித்தார்.
மேலும் கடுங்கோபம் அடைந்த கோபி அருகில் உள்ள மரத்தை எத்தினார். அங்குள்ள கல்லை தூக்கி எறிந்தார். இவ்வாறு தனது கோபத்தை ஆற்றிக்கொண்ட கோபி அதன் பின் ராதிகாவின் வீட்டிற்கு சென்றார்.
ராதிகா கோபியை ஏற்றுக்கொள்வாரா? பாக்கியா Single Mother ஆவதற்கு முடிவெடுத்துவிட்டாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
