TELEVISION
“வீட்ட விட்டு வெளிய போடா ராஸ்கல்”.. கோபிக்கு ஆர்டர் போட்ட ராமமூர்த்தி
கோபியை “வீட்டை விட்டு வெளிய போ” என ஆர்டர் போட்டு துரத்தினார் தந்தை ராமமூர்த்தி.
விஜய் தொலைக்காட்சியின் “பாக்கியலட்சுமி” தொடரில் ராதிகாவிற்கும் கோபிக்கும் இடையே உள்ள உறவு தெரிந்த பிறகு பாக்கியா வீட்டை விட்டு வெளியேறினார். பல நாட்களாக வீடு திரும்பாத பாக்கியா திடீரென வீடு திரும்பினார்.
கோபியை நீதிமன்றத்துக்கு அழைத்தார் பாக்கியா. அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் பாக்கியாவின் திறமையான பேச்சால் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கோபி பாக்கியாவை வீட்டை விட்டு வெளியேறும்படி கத்தினார். மேலும் “பாக்கியா இந்த வீட்டில் ஒரு வேலைக்காரியாகத் தான் இருந்தாள்” என அவமானப்படுத்தினார். இதனை தொடர்ந்து பாக்கியா அறைக்குச் சென்று பெட்டியை எடுத்துக்கொண்டு கீழே வந்தார்.
அவரை தடுத்த இனியா ““அப்பா தப்பு செய்ததுனால் என்னை விட்டுவிட்டு போக உனக்கு எப்படி மனது வந்தது?” என கேட்கிறார். அதற்கு பாக்கியா “உன்னை விட்டு போக வேண்டும் என்பது நான் எடுத்த முடிவு இல்லை. அப்படி ஒரு நெருக்கடிக்கு நான் தள்ளப்பட்டிருக்கிறேன்” என கூறினார்.
அப்போது கோபி “போதும் உன் டிராமா? இந்த குடும்பத்திற்கும் உனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என ஆகிப்போயிற்று. வீட்டை விட்டு கிளம்பு” என கத்தினார். அதனை தொடர்ந்து பாக்கியாவின் கையில் இருந்த பெட்டியை பிடுங்கி தூக்கிப் போட்டார் கோபி. திடீர் திருப்பமாக அதில் கோபியின் துணிகள் இருந்தது.
இதனை தொடர்ந்து பாக்கியா “நான் ஏன் வெளியே போக வேண்டும். நீங்கள் தான் வெளியே போக வேண்டும். உங்களுக்கு என்னை வெளியே போகச் சொல்ல உரிமை இல்லை” என கூறினார்.
மேலும் பாக்கியா “பணம் மட்டும் பொறுப்பு இல்லை. வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் என்ன தேவை என்று செய்து கொடுப்பதே பொறுப்பு. அந்த வகையில் நான் உங்களை விட ஆயிரம் மடங்கு பொறுப்பானவள்” என கூறினார். அதற்கு கோபி “வெட்டிவிட்டவளுக்கு இந்த வீட்டில் என்ன வேலை. வெளியே கிளம்பு” என கூறினார்.
அதற்கு கோபியின் தந்தை ராமமூர்த்தி “கோபி, நீ வெளியே போ. பாக்கியா இங்கே தான் இருப்பாள். வெளியே போனால் தான் உனக்கு இந்த குடும்பத்தின் அருமை தெரியும்” என கத்தினார்.
கோபி தன் தவறை உணர்வாரா? பாக்கியா கோபியை ஏற்றுக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
