TELEVISION
“இவ்வளவு நாள் உன் கூட இருந்தேன்… நான் தான் ஏமாளி”.. எரிமலையாய் வெடிக்கும் கோபி
கோபி பாக்கியாவிடம் “நான் தான் ஏமாந்தேன்” என பாக்கியா முன் கோபமாய் கொந்தளித்தார். ஏன் தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா-கோபியின் உறவை பற்றி அறிந்த பாக்கியா கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறினார். குடும்பத்தினர் பல முறை அழைத்து வீட்டிற்கு வராத பாக்கியா திடீரென வீட்டிற்கு வந்தார்.
பாக்கியா “கோர்ட்டுக்கு போகலாம்” என கோபியை அழைத்த போது குடும்பமே அதிர்ச்சியானது. அதன் பின் கோபியும் பாக்கியாவும் தனது மகன் எழிலுடன் கோர்ட்டுக்கு போயினர்.
அங்கே நீதிபதி அவர்களிடம் “கவுன்சிலிங் செல்கிறீர்களா?” என கேட்டார். அதற்கு பாக்கியா “இல்லை மேடம், அவர் கேட்டபடி நான் டைவர்ஸ் கொடுக்கிறேன்” என கூறினார்.
அதற்கு நீதிபதி “ஆண்கள் எளிதாக சொல்லிவிடுவார்கள். நீங்கள் நன்றாக யோசித்து தான் முடிவெடுத்துள்ளீர்களா?” என பாக்கியாவிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த பாக்கியா “என்ன தான் கணவன் மனைவி உறவாக இருந்தாலும் ஒருவரை அண்டி பிழைப்பது மிகப்பெரிய அவமானம். தன்னம்பிக்கையும், சுய மரியாதையும் உள்ள யாராக இருந்தாலும் இங்கே பிழைப்பதற்கு ஆயிரம் வழி இருக்கிறது” என கூறினார்.
பாக்கியலட்சுமியின் வாதங்களை கேட்ட நீதிபதி இருவருக்கும் விவாகரத்து வழங்க உத்தரவிட்டார். இதனிடையே கோபி பாக்கியாவிடம் எரிமலையாய் அனலை கக்கினார். அதாவது “உண்மையில் நான் தான் ஏமாளி, வெளியுலகத்தை பற்றி ஒன்றுமே தெரியாத மரமண்டையுடன் இவ்வளவு வருடம் குடும்பம் நடத்திய என்னை விட பெரிய ஏமாளி வேறு யார் இருக்க முடியும்” என கோபத்தில் கத்தினார். இதனை கேட்ட எழிலனுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை.
“உனக்கு என்னை பிடிக்கவில்லை. அதனால் தான் டைவர்ஸ் என்று சொன்னதுமே துள்ளி குதித்துவிட்டு கோர்ட்டுக்கு வந்துவிட்டாய்” என கூறினார். இவ்வாறு கோபி தான் செய்த குற்றத்தை மறந்து பாக்கியாவை குறை கூறினார்.
அனைவரும் எதிர்பார்த்த இந்த தருணம் வந்துவிட்டதனால் இதன் பிறகு என்ன நடக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.