TELEVISION
முத்துக்குமாரை ஏன் வெறுக்கிறீர்கள் வித்யூலேகா? ரசிகரின் அதிர்ச்சி கேள்வி
வித்யூலேகாவிடம் “முத்துக்குமாரை ஏன் வெறுக்கிறீர்கள்?” என ஒரு ரசிகர் அவரது இன்ஸ்டா பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர் அளித்த பதில் என்ன தெரியுமா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியில் சென்ற வாரம் வைல்ட் கார்ட் ரவுண்டு நடைபெற்றது. இதில் எலிமினேட் ஆன குக்குகளான சந்தோஷ், முத்துக்குமார், கிரேஸ், ராகுல் தாத்தா, சுட்டி அரவிந்த், ரோஷினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் சந்தோஷ், கிரேஸ், முத்துக்குமார் ஆகியோர் இறுதி சுற்று வரை சென்றனர். அதில் சந்தோஷ் சிறப்பாக சமைத்து ஐந்தாவது ஃபைனலிட்டாக தேர்வானார். அதன் பின் எதிர்பாராவிதமாக கிரேஸ் ஆறாவது ஃபைனலிட்டாக தேர்வானார்.
முத்துக்குமார் சிறப்பாக சமைத்து சில பாயிண்ட்டுகள் வேறுபாட்டால் வேறு வழியின்றி எலிமினேட் ஆனார்.
இந்த நிகழ்ச்சியின் இடையே அட்வாண்டேஜ் ரவுண்டில் அட்வாண்டேஜ் ஜெயித்த கிரேஸ் மற்றும் பரத், தனது அட்வாண்டேஜ்ஜை பயன்படுத்தி மெயின் குக்கிங்கில் முத்துக்குமாருக்கு கடினமான ஒரு உணவு பொருளை சமைக்குமாறு நிர்பந்தத்தை ஏற்படுத்திக் கொடுத்து விட்டனர். இதனை வித்யூலேகா வரவேற்பது போல் பேசினார்.
இதனை குறிப்பிட்டு ஒரு ரசிகர் வித்யூலேகாவின் Q&A session-ல் “ஏன் முத்துக்குமாரை வெறுக்கிறீர்கள்? என ஒரு கேள்வியை கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த வித்யூலேகா “முத்துக்குமாரின் மேல் எனக்கு ஒரு துளி வெறுப்பு கூட கிடையாது. அவர் மிகவும் திறமையானவர். அவர் ஃபைனலுக்கு வந்திருக்க வேண்டும்” என கூறினார்.
“குக் வித் கோமாளி” சீசன் 3 நிகழ்ச்சியில் அடுத்த வாரம் ஃபைனல்ஸ் நடைபெறவுள்ளது. இதில் வித்யூலேகா, ஸ்ருத்திகா, அம்மு அபிராமி, கிரேஸ், சந்தோஷ், தர்ஷன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த சீசனில் யார் வெற்றி பெறப்போகிறார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.