GOSSIPS
ஓஹோ! இதனால் தான் பைக் நடிகர் படம் லேட் ஆகுதா?? அய்யோ பாவம்!
அந்த பிரபல தயாரிப்பாளர் ஒரு பெரிய சிக்கலில் மாட்டியுள்ளதால் தான் பைக் நடிகர் படம் தாமதம் ஆவதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
இந்தியாவின் டாப் தயாரிப்பாளர்களில் ஒருவரான அந்த தயாரிப்பாளர் தமிழில் சில திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகரின் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு அந்த திரைபடத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றனர்.
வருகிற தீபாவளிக்கு அந்த படம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் ரசிகர்களின் தலையில் குண்டை தூக்கிப் போட்டார் அந்த படத்தின் நடிகர். அதாவது திடீரென இன்ப சுற்றுலாவுக்கு கிளம்பி போனார். “என்னடா இது? படம் சீக்கிரம் ரிலீஸ் ஆகும் என வெயிட் செய்துகொண்டிருந்தால் இப்படி திடீர்ன்னு டூர் கிளம்பிட்டாரே” என ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.
எனினும் விரைவில் திரும்பி வந்த அந்த நடிகர் படப்பிடிப்பிற்கும் செல்லவில்லையாம். என்ன காரணம் தெரியுமா? தற்போது படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார்களாம். அதாவது அந்த பிரபல தயாரிப்பாளர் ஒரு பெரிய சிக்கலில் மாட்டியுள்ளதாக சில தகவல்கள் வருகிறதாம்.
இன்றைய சூழலில் இந்தியா முழுவதும் பல பிரபலங்கள் வீட்டில் ஐடி ரைடு சூடுபிடித்துள்ளது. இதில் அந்த பிரபல தயாரிப்பாளரும் சிக்கி உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறதாம். அதாவது கூடிய விரைவில் தன்னுடைய அலுவலகத்திற்கு ரைடு வரப்போகிறார்கள் என பல நம்பத்தகுந்த தகவல்கள் அவருக்குச் சென்று சேர்ந்ததாம். ஆதலால் கொஞ்சம் பொறுமையாக படப்பிடிப்பை தொடங்குவோம் என எண்ணி தற்காலிகமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருக்கிறாராம். இதனால் தான் அந்த படம் வெளியாக தாமதாமாகிறது என கோலிவுட் வட்டாரங்களில் பலரும் கிசுகிசுக்கின்றனர்.