GOSSIPS
கோபப்பட்டு ஊர் ஊராக சுற்றிய முன்னணி நடிகர்?? இதான் காரணமா?
அந்த நடிகர் இன்பச் சுற்றுலா சென்றிருக்கிறார் என்று பார்த்தால் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்சனையால் தான் உலகத்தை சுற்றி பார்க்க கிளம்பினாராம். என்ன விஷயமா இருக்கும்?
தமிழின் முன்னணி நடிகரான அவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். சினிமா மட்டுமல்லாது பல துறைகளிலும் கைத்தேர்ந்த நடிகராக திகழ்ந்து வருபவர்.
இவர் தற்போது தமிழகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிற ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு வெளிவர இருக்கிறது. இந்த நிலையில் திடீரென அந்த நடிகர் உலகம் சுற்ற கிளம்பினார்.
“படம் சீக்கிரம் வெளிவரும் என காத்துக்கொண்டிருந்தால் இவர் என்ன ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறார்” என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். “சரி, பிரேக் எடுத்துக்கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார்” என ரசிகர்கள் மனசை தேற்றிக்கொண்டு வந்தனர்.
ஆனால் தற்போது பரவி வரும் செய்தியால் ரசிகர்களின் தலையில் இடி விழுந்துள்ளதாம். அதாவது அந்த நடிகர் இன்பச் சுற்றுலா சென்று திரும்பி வந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னமும் அவர் படப்பிடிப்புக்குச் செல்லவில்லையாம்.
ஏன் என்றால் அவருக்கும் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கும் பிரச்சனையாம். அதாவது இது வரை நடித்த காட்சிகளுக்கு சம்பளம் ஒழுங்காக தரவில்லையாம். அதனால் தான் நடிகர் கோபப்பட்டு வேண்டுமென்றே படப்பிடிப்பை தவிர்க்கும் வகையில் இவ்வாறு உலகத்தைச் சுற்றிப்பார்க்கச் சென்றுவிட்டாராம்.
எனினும் இது குறித்து பேச்சு வார்த்தை நடந்ததாகவும், அந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததாகவும் கூறப்படுகிறது. ஆதலால் நடிகர் விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
“என்ன இருந்தாலும் இப்படியா கோபித்துக்கொண்டு போவது” என அந்த நடிகரைப் பற்றி கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
