TELEVISION
ஒரு ஐஸ் க்ரீமுக்கு இந்த பாடு?? ஜீவாவை கரெக்ட் பண்ணும் ப்ரியா!!
“ஈரமான ரோஜாவே” சீசன் 2 தொடரில் ஒரு ஐஸ்கிரீம் ஊட்டிவிட படாத பாடு படுகிறார்கள் இருவரும்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மக்களின் மனதை வென்ற “ஈரமான ரோஜாவே” சீசன் 2 தொடரில் காவ்யாவின் மனதை வெல்ல பார்த்தி முயன்று வருகிறார். அதே போல் ப்ரியா தனது கணவனான ஜீவாவிடம் அன்பு காட்டி வருகிறார்.
பார்த்தி காவ்யாவின் மனதை வெல்ல பல முறை முயற்சி செய்தும் காவ்யா வழிக்கு வருவது போல் தெரியவில்லை. காவ்யாவின் மனதுக்குள் பார்த்தியின் மீது ஓரளவு ஆசை இருந்தாலும், பார்த்தியின் தாய் “என் மகனை விட்டு பிரிய முயற்சி செய், அவனிடன் பாசத்தை காட்டாதே” என கூறியது காவ்யாவின் நினைவில் அவ்வப்போது வந்துகொண்டே இருக்கிறது.
ஜீவா காவ்யாவிடம் பார்த்தி மீது பாசமாக நடந்துகொள் என கூறியபோதும் பார்த்தியின் மேல் முழுமையாக ஈடுபாடு வரவில்லை. சமீபத்தில் கூட காவ்யா தனது வீட்டிற்கு வந்த விருந்தாளிகளுக்கு சமைத்து போட்டார். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. பார்த்தி அந்த சமையலை சாப்பிட்டு மெச்சிக்கொட்டினார்.
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள புரோமோவில் பார்த்தி காவ்யாவிற்கு ஐஸ் க்ரீம் ஊட்டிவிட முயல்கிறார். காவ்யா முரண்டு பிடிக்கிறார்.
அதே போல் ஒரு பக்கம் ப்ரியா தனது கணவன் ஜீவாவிற்கு ஐஸ்கிரீம் ஊட்டிவிடுகிறார். ப்ரியா ஜீவாவிடம் அன்பு காட்ட நினைத்தாலும், ஜீவா முழு ஈடுபாடு காட்டுவதில்லை. பார்த்தி காவ்யாவிடம் அன்பு காட்ட நினைத்தாலும் காவ்யா ஈடுபாடு காட்டுவதில்லை. இந்த இருவரின் மனநிலையும் எப்போது மாறும்? காவ்யா தனது முன்னாள் காதலரான ஜீவாவை மறந்து பார்த்தியை முழு மனதோடு ஏற்றுக்கொள்வாரா? ஜீவா ப்ரியாவின் உறவு எப்படி இருக்கப்போகிறது? என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.
