REVIEW
“டான்” ஆ? இல்ல டண்டனக்கா டானா? A short review..
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்திருக்கும் “டான்” திரைப்படம் எப்படி இருக்கு?
ஒரு குக்கிராமத்தில் வாழும்சமுத்திரக்கனிக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. சமுத்திரக்கனிக்கு பெண் குழந்தைதான் ஆசை. ஆனால் பிறந்ததோ ஆண் குழந்தை. ஆதலால் பையன் மேல் பாசம் குறைவாக இருக்கிறது. பையன் உருப்படமாட்டான் என நினைக்கிறார்.
பையன் (சிவகார்த்திகேயன்) வளர்ந்து பள்ளிப்படிபை முடித்து இன்ஜினியரிங்க் சேர்கிறார். கல்லூரியில் எஸ். ஜே. சூர்யாவுடன் மோதல் ஏற்படுகிறது. சிவகார்த்திகேயன் டிகிரி வாங்குவதை தடுக்கும் விதமாக பல முட்டுக்கட்டைகள் போடுகிறார் எஸ். ஜே. சூர்யா. இத்தடைகள் எல்லாம் தாண்டி சிவகார்த்திகேயன் வெற்றி பெறுகிறாரா என்பதே கதை.
சிவகார்த்திகேயனின் தந்தையான சமுத்திரக்கனி, ஒரு ஸ்டிரிக்ட் அப்பா எப்படி இருப்பாரோ அந்த யதார்த்தத்தை கண் முன் கொண்டு வருகிறார். கல்லூரி மாணவனாக வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிளிர்கிறார். நடிப்பிலும் சரி நடனத்திலும் சரி எனர்ஜி லெவலில் மாஸ் காட்டுகிறார்.
பிரியங்கா மோகன் அழகு பதுமையாக வந்து கண்களுக்கு காட்சி தருகிறார். அதை தாண்டி நடிப்பில் அவ்வளவாக ஸ்கோர் செய்யவில்லை. பால சரவணன், ஷிவாங்கி, காளி வெங்கட், முனிஸ்காந்த், ராதாரவி ஆகியோர் தாங்கள் ஏற்ற கதாப்பாத்திரத்திற்கு நன்றாக நடித்துள்ளனர்.
திரைப்படத்தின் அல்டிமேட் பலம் எஸ். ஜே. சூர்யா. அவரின் நடிப்பை பற்றி நாம் கூற தேவையில்லை. வில்லனாக மாஸ் காட்டுகிறார். தனது நடிப்பல் சக நடிகர்கள் மீது கண்களை போக விடாமல் பார்வையாளர்களை கட்டிப்போடுகிறார்.
அனிருத் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகியிருந்தாலும் பாடல்கள் காட்சிப் படுத்தப்படிருந்த விதம் சுமாராகவே இருக்கிறது. இயக்குனர் சிபி சக்கரவர்த்திக்கு இது முதல் படம் போலவே தெரியவில்லை. ஒரு matured இயக்குனராக இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தின் கிளைமேக்ஸில் இடம்பெற்ற சென்டிமெண்ட் காட்சிகள் பார்வையாளர்களை கலங்கடிக்கும் வகையில் எடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் காமெடி, ரொமான்ஸ் என ஒரு பக்கா கமர்சியல் மெட்டீரியலாக இத்திரைப்படம் மிளிர்கிறது.