HOLLYWOOD
“ஜாக்கெட்டை கழட்டு”… ஆர்டர் போட்ட டைரக்டர், பதறிப்போன ஜெனிஃபர் லோபஸ்
பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் லோபஸை ஒரு பிரபல இயக்குனர் “மார்பகங்களை காட்டு” என கட்டளை இட்டுள்ளார். அதற்கு ஜென்னிஃபர் லோபஸ் என்ன செய்தார் தெரியுமா?
ஜெனிஃபர் லோபஸ் ஹாலிவுட்டின் பிரபலமான நடிகை. அவர் நடிகை மட்டுமல்லாத பல மியூசிக் ஆல்பம்களிலும் கலைகட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜென்னிஃபர் லோபஸ் ஒரு திரைப்படத்தில் நிர்வாணக்காட்சியில் நடிக்கவிருந்தாராம்.
அந்த காட்சி படமாக்கப்படுவதற்கு முன் அந்த திரைப்படத்தின் இயக்குனர் ஜெனிஃபர் தனியாக இருந்த போது “உனது மார்பகங்களை காட்டு” என கூறியுள்ளார், இதனை கேட்ட ஜெனிஃபர் லோபஸ் பதறியுள்ளார்.
இயக்குனர் மறுபடியும் “மார்பகங்களை காட்டு” என கூறியிருக்கிறார். ஆனால் ஜெனிஃபர் லோபஸ் மறுத்துள்ளார். டைரக்டர் தொடர்ந்து அவ்வாறு கூற “நிர்வாண படப்பிடிப்பில் என் மார்பகங்களை பார்த்துக் கொள்ளுங்கள். உங்களிடம் நான் தனியாக காட்டமுடியாது” என கூறியுள்ளார்.
அதன் பிறகு இயக்குனர் திரும்பி சென்றுவிட்டாராம். சிறிது நேரத்திற்கு பிறகு ஜெனிஃபர் லோபஸிடம் திரும்ப வந்து அந்த இயக்குனர் மன்னிப்பு கேட்டாராம். இச்சம்பவத்தை 2019 ஆம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் ரிப்போர்டருக்கு அளித்த பேட்டியில் இதை கூறியுள்ளார்.
இது குறிதது அவர் மேலும் கூறியதாவது “இது போன்ற தருணங்களில் நாம் திடமாக இருக்க வேண்டும். நான் அங்கு திடமாக நின்று மறுத்துவிட்டதால் தான் அவர் திரும்ப சென்றுவிட்டார். அவர் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார்” என தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் அச்சமயத்தில் ஹாலிவுட்டையே கதிகலங்க வைத்தது. உச்ச நடிகையாக இருக்கும் ஜெனிஃபர் லோபஸே இது போன்ற தருணத்தை சந்தித்துள்ளார் என்றால் சாதாரண நடிகைகள் என்ன செய்வார்கள்” என ஹாலிவுட் வட்டாரங்கள் அசைப்போட்டன. இச்சம்பவத்தை குறித்த செய்திகள் தற்போது ஹாலிவுட் வட்டாரங்களில் டிரெண்டிங்கில் உள்ளது.
